Thaai Kizhavi Day 4 Box Office : தாய் கிழவி படைத்த வசூல் சாதனை... 4 நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

Published : Mar 03, 2026, 03:21 PM IST

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் தாய் கிழவி திரைப்படம் 4 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Thaai Kizhavi Movie Box Office

ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 27ந் தேதி திரைக்கு வந்த படம் தாய் கிழவி. இப்படத்தை சிவகுமார் முருகேசன் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி இருந்தார். இப்படத்தில் சிங்கம்புலி, பால சரவணன், அருள்தாஸ், முத்துக்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து இருந்தார். இப்படத்தை எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளது.

24
தாய் கிழவி பாக்ஸ் ஆபிஸ்

தாய் கிழவி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ.22 கோடி வசூலை வாரிக் குவித்த நிலையில், நான்காம் நாளான நேற்று வேலைநாளாக இருந்தபோதிலும் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று 2.10 கோடி வசூலித்து உள்ளது. இதுதவிர கர்நாடகாவில் 18 லட்சமும், இந்தியாவின் இதர மாநிலங்களில் 10 லட்சமும், வெளிநாடுகளில் 58 லட்சமும் வசூலித்திருக்கிறது. இதன் மூலம் நான்காவது நாளில் மட்டும் உலகளவில் இப்படம் ரூ.2.96 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கிறது.

34
ரெக்கார்ட் பிரேக்கிங் வசூல்

4 நாட்கள் முடிவில் இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.15.66 கோடி வசூலித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக வெளிநாடுகளில் ரூ.6.63 கோடி வசூல் அள்ளி உள்ளது. மேலும் கர்நாடகாவில் 1.53 கோடியும், இந்தியாவின் இதர மாநிலங்களில் 45 லட்சமும் வசூலித்துள்ள இப்படம் இதுவரை உலகளவில் ஒட்டுமொத்தமாக 24.27 கோடி வசூலை வாரிசுருட்டி இருக்கிறது. வார நாட்களில் பெரிய நடிகர்களின் படமே கோடிக் கணக்கில் வசூலிப்பது எட்டாக் கனியாக இருந்து வரும் நிலையில் தாய் கிழவி திரைப்படம் கிட்டத்தட்ட 3 கோடி வசூலித்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

44
தாய் கிழவி பட்ஜெட்

தாய் கிழவி திரைப்படம் வெறும் 10 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இப்படத்தின் ஓடிடி, இசை மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவை ரூ.9.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதனால் ரிலீசுக்கு முன்பே இப்படம் தனக்கு லாபம் கொடுத்துவிட்டதாக சிவகார்த்திகேயன் கூறி இருந்தார். இப்படம் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 12 கோடி ஷேர் கொடுத்துள்ளது. நான்கு நாட்களிலேயே லாபக் கணக்கை தொடங்கிய இப்படம் இதுவரை பட்ஜெட்டைவிட கூடுதலாக 25 சதவீதம் அதிகம் வசூலித்து உள்ளது. இதன்மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி தாய் கிழவி திரைப்படம் நகர்ந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories