தலைவன் தலைவியால் முதல் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன சிவகார்த்திகேயனின் ஹவுஸ்மேட்ஸ்

Published : Aug 02, 2025, 02:09 PM IST

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தர்ஷன் நடித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே வசூலில் கடும் சரிவை சந்தித்து உள்ளது.

PREV
14
Housemates Day 1 Collection

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ள படம் ஹவுஸ்மேட்ஸ். ராஜவேல் இயக்கியுள்ள இப்படத்தில் தர்ஷான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இதில் அர்ஷதா, காளி வெங்கட், வினோதினி, தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேமம் பட இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை எம்.எஸ்.சதீஷ் மேற்கொண்டுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் ஹவுஸ்மேட்ஸ் படம் சொதப்பி இருக்கிறது.

24
ஹவுஸ்மேட்ஸ் படத்தின் முதல் நாள் வசூல்

ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் வசூலில் சற்று மந்தமாகவே தொடங்கி இருக்கிறது. அதன்படி இப்படம் முதல் நாளில் வெறும் ரூ.60 லட்சம் மட்டுமே வசூலித்திருக்கிறது. நேற்று ரிலீஸ் ஆன படங்களில் இந்த படத்திற்கு தான் அதிக வசூல் கிடைத்திருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கடந்த வாரம் ரிலீஸ் ஆன தலைவன் தலைவி பட வசூலில் பாதி கூட இப்படம் வசூலிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால், ஹவுஸ்மேட்ஸ் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34
ஹவுஸ்மேட்ஸுக்கு தலைவலியான தலைவன் தலைவி

பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனதில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் அதன் வசூல் வேட்டை தொடர்கிறது. அதன்படி இப்படம் நேற்று மட்டும் ரூ.3.7 கோடி வசூலித்திருக்கிறது. உலகளவில் 50 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வரும் தலைவன் தலைவி திரைப்படம் நேற்று தெலுங்கிலும் ரிலீஸ் ஆனதால் இதன் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விரைவில் இப்படம் 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
ஹவுஸ்மேட்ஸுக்கு குவியும் பாராட்டு

தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத புதிய கதைக் களத்துடன் ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு திரைத்துறையினர் மத்தியிலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக ஜனநாயகன் படத்தின் இயக்குனர் எச்.வினோத், ஹவுஸ்மேட்ஸ் படத்தை பார்த்து இம்பிரஸ் ஆகி படக்குழுவை பாராட்டி இருக்கிறார். படம் சூப்பராக இருப்பதாக இயக்குனர், நாயகன் தர்ஷன், நடிகர் காளி வெங்கட் ஆகியோரை நேரில் பாராட்டி இருக்கிறார். இப்படி திரைத்துறையினர் மத்தியிலும் பாராட்டை பெறும் ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் வசூலிலும் போகப் போக பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories