முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் - ஜெயம் ரவி! எவ்வளவு தெரியுமா?

Published : May 16, 2021, 10:12 AM IST

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேர்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் தமிழக அரசுக்கு உதவும் விதமாக அனைவரும் தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.    

PREV
16
முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் - ஜெயம் ரவி! எவ்வளவு தெரியுமா?

இதனையடுத்து, அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த தொகையை, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தும், ஆன்லைன் பரிவர்த்தனை மூலமும் கொடுத்து வருகிறார்கள்.

26

அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரூ.10 லட்சமும், திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடியும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கினர். 

36

நடிகர் சூர்யா முதல்வரை சந்தித்து ரூ.1 கோடி வழங்கினார். அவரை தொடர்ந்து , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா தன்னுடைய கணவர் விசாகனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். 

46

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அதே போல் தல அஜித் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் ஆன்லைன் மூலமாக ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது. 
 
56

மேலும், இயக்குனர் வெற்றி மாறன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் தொடர்ந்து நிதி உதவி வழங்கிய நிலையில், இவர்களை அடுத்து, பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து நிதி உதவி வழங்கியுள்ளனர்.

66

சிவகார்த்திகேயன் கொரோனா நிவாரணத்திற்கு ரூ.25 லட்சமும், நடிகர் ஜெயம் ரவி, தன்னுடைய சகோதரர் மற்றும், தந்தையுடன் வந்து ரூ.10 லட்சமும் வழங்கியுள்ளார். பிரபலங்கள் தொடர்ந்து நிதி உதவி வழங்கி வருவதற்கு பலர் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories