சிவகார்த்திகேயன் பட நடிகர் மாரடைப்பால் மரணம்... கோலிவுட்டை விடாமல் விரட்டும் சோகம்...!

First Published | May 15, 2021, 4:50 PM IST

குறிப்பாக காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து மரணிப்பது ரசிகர்களை மனதில் கனத்தைக் கூட்டியுள்ளது. 

கொரோனா 2வது அலையால் ஏற்படும் பாதிப்புகள் போதாது என்று, அடுத்தடுத்து திரையுலகினர் பலரும் மரணமடையும் சம்பவம் கோலிவுட்டையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து மரணிப்பது ரசிகர்களை மனதில் கனத்தைக் கூட்டியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகரான விவேக் மாரடைப்பால் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி காலமானார். அந்த பெருஞ்சோகத்தில் இருந்து மீள்வதற்கு முன்னதாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் ஏப்ரல் 30ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.
Tap to resize

அதனைத் தொடர்ந்து பிரபல காமெடி நடிகரான பாண்டு கடந்த 6ம் தேதி கொரோனாவால் மரணமடைந்தார். மே 11ம் தேதி ‘கிணத்தைக் காணோம்’ காமெடி புகழ் நெல்லை சிவா மாரடைப்பால் உயிரிழந்தார். ‘கில்லி’ படத்தில் ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகர் மாறன் இரு தினங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு பலியானார்.
இப்படி திரைப்படங்கள் மூலமாக மக்களை மகிழ்வித்த கலைஞர்கள் பலரும் மாரடைப்பு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்தடுத்து மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தற்போது சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமைராஜா ஆகிய படங்களில் காமெடி ரோலில் நடித்தவரும், இணை இயக்குநருமான பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் படங்களில் சூரியுடன் சேர்ந்து பவுன்ராஜ் நடித்துள்ள காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக ரஜினிமுருகன் படத்தில் ‘என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை!’என்ற வாழை பழ காமெடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்தது.
மெல்ல, மெல்ல காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வந்த பவுன்ராஜின் திடீர் மரணம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினிமுருகன் ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய பவுன்ராஜ் மறைவிற்கு இயக்குநர் பொன்ராம் இரங்கல் தெரிவித்துள்ள

Latest Videos

click me!