தமிழகத்தில் பிறந்து இந்திய ராணுவத்தில் சிறந்த பல பதவிகளை வகித்து வந்து, ஒரு கட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க துவங்கினார். இந்த திரைப்படம் ராணுவ வீரர் தொடர்பான திரைப்படம் என்பதால் அதற்கான பிரத்தியேக பயிற்சிகளையும் மேற்கொண்டார் சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட 8 மாத படப்பிடிப்பிற்கு பிறகு இந்த தீபாவளி திருநாளுக்கு வெளியானது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம். உண்மையில் இந்த படம் வெளியான உடனேயே பல சர்ச்சைகளை சந்தித்தது. இன்றளவும் இந்த படம் தொடர்ச்சியாக பல சர்ச்சைகளை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.