அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உருவெடுத்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது பராசக்தி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஸ்ரீலீலா, அதர்வா, ரவி மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 100வது படமாகும். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
24
சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்
அமரன் படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்கு பின்னர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சம்பளத்தை 70 கோடியாக உயர்த்திவிட்டாராம். இருப்பினும் பராசக்தி படத்தில் நடிக்க அவர் சம்பளமே வாங்கவில்லையாம். அங்கு தான் ஒரு ட்விஸ்டும் இருக்கிறது. பராசக்தி திரைப்படம் சிவகார்த்திகேயன் கெரியரிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாகும். இப்படம் கன்பார்ம் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையும் சிவகார்த்திகேயனுக்கு இருக்கிறதாம். இதனால் அவர் சம்பளம் வாங்காமல், படத்தின் லாபத்தில் இருந்து பங்கு கேட்டிருக்கிறாராம்.
ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தான் லாபத்தில் பங்கு கேட்டு நடிப்பது வழக்கம், அந்த லிஸ்டில் லேட்டஸ்டாக சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் தனக்கு அமரன் படத்தில் தான் முழு சம்பளமும் கிடைத்ததாகவும் மற்ற படங்களில் எல்லாம் பாதி சம்பளத்தை பிடித்துக் கொண்டுதான் கொடுப்பார்கள் என பேசி இருந்தார். தற்போது லாபத்தில் பங்கு கேட்டிருப்பதால் படத்தின் ரிசல்டை பொறுத்து தான் அவருக்கு சம்பளம் கிடைக்கும்.
44
ஜெட் வேகத்தில் உயரும் சிவகார்த்திகேயன் சம்பளம்
ஒரு வேளை படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துவிட்டால் சிவகார்த்திகேயனுக்கு ரூ.100 கோடிக்கு மேல் லாபத்தில் பங்கு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தனுஷ், சூர்யா போன்ற நடிகர்கள் 50 கோடியையே இன்னும் நெருங்காத நிலையில், சிவகார்த்திகேயன் சம்பள விஷயத்தில் அவர்களை மிஞ்சி இருக்கிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய மதராஸி படத்தில் நடித்திருக்கிறார் சிவா. இப்படம் ஹிட்டானால் சிவகார்த்திகேயனின் சம்பளம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.