கோலிவுட்டில் ஜீரோ பிளாப் இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. அவர் இதுவரை தமிழில் இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய நான்கு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வேறலெவல் ஹிட் அடித்தன. அப்படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லீ, அங்கு ஷாருக்கான் உடன் கூட்டணி அமைத்து அவர் நடித்த ஜவான் திரைப்படத்தை இயக்கினார். அப்படம் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
24
டோலிவுட்டுக்கு தாவிய அட்லீ
ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் அட்லீக்கு பாலிவுட்டில் மவுசு அதிகரித்தது. அவர் இயக்கத்தில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் வரிசைகட்டி காத்திருக்கிறார்கள். அந்த வகையில் அவர் சல்மான் கான் உடன் இணைந்து பிரம்மாண்ட படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அப்படத்தை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டுவிட்டு, டோலிவுட்டுக்கு தாவி இருக்கிறார் அட்லீ. அவர் இயக்க உள்ள அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க உள்ளாராம்.
புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்துள்ள அல்லு அர்ஜுன், முதன்முறையாக இயக்குனர் அட்லீ உடன் கூட்டணி அமைக்க உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்டாக் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்க கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
44
ஹீரோயினாக ஜான்வி கபூர்
இந்நிலையில், அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்கிற அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே தெலுங்கில் தேவரா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிலையில், அடுத்ததாக புச்சிபாபு சனா இயக்கும் படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது அல்லு அர்ஜுன் பட வாய்ப்பையும் தட்டி தூக்கி உள்ளதால் டோலிவுட்டில் செம பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார் ஜான்வி கபூர்.