சிவகார்த்திகேயன்..10 ஆண்டு கொண்டாட்டம்.. அறிமுக இயக்குனர் முதல் ரசிகர்கள் வரை நன்றி சொன்ன SK

Kanmani P   | Asianet News
Published : Feb 03, 2022, 03:00 PM IST

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிக்க ஆரம்பித்து 10 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக தன்னை முதலில் அறிமுகப்படுத்திய இயக்குனர் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் மடல் எழுதியுள்ளார்..

PREV
111
சிவகார்த்திகேயன்..10 ஆண்டு கொண்டாட்டம்.. அறிமுக இயக்குனர் முதல் ரசிகர்கள் வரை நன்றி சொன்ன SK
sivakrthikeyan

கல்லூரி படித்துக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான  கலக்கப்போவது யார் ..நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் பதித்தார்.அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார்.

211
sivakrthikeyan

சிவகார்த்திகேயன் தனது நண்பர் அட்லீயின் முகப்புத்தகம் ,அடையாளம், குறள் 786 மற்றும் 360° உள்ளிட்ட குறும்படங்களில் தோன்றினார். இதன் மூலம் ஏகன் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனை கவனித்து அவருக்கு ஒரு துணை வேடத்தை வழங்கினார், ஆனால் அவரது பகுதிகள் இறுதி கட் செய்யபடவில்லை...

311
sivakrthikeyan

பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் கே வை அணுகினார். மெரினா கடற்கரைக்கு சென்று சுற்றுப்புறங்களை ஆய்வு செய்வதன் மூலம் அவர் தனது முதல் பாத்திரத்திற்குத் தயாரானார் சிவகார்த்திகேயன் அவரது இயல்பான நகைச்சுவை திறமை மூலம் இரசிகர்களின் மனதை வென்றெடுத்தார்..

411
sivakrthikeyan

தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம்தனுஷுக்கு பழக்கமான சிவா.. மெரினாவின் வெளியீட்டிற்கு முன் ஐஸ்வர்யா தனுஷின்  3 படத்தில்  தனுஷுக்கு தோழனாக ஒரு துணை வேடத்தில் நடிக்க  ஒப்பந்தமானார்..

511
sivakrthikeyan

அவர் அடுத்ததாக எழிலின் காதல் நகைச்சுவை 'மனம் கொத்தி பறவையில்' நடித்தார், இது கலவையான விமர்சனங்களை பெற்றது.., ஆனால் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது.

611
sivakrthikeyan

2013-ம் வருடத்தின் முதல் வெளியீடான கேடி பில்லா கில்லாடி ரங்கா வில் இரட்டை ஹீரோக்களில் ஒருவராக தோன்றிய சிவகார்த்திகேயன் தனது இயல்பான நகைசுவை மூலம் அதிகமாக பேசப்படும் நபராக மாறினார்.இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் மீண்டும் பாண்டிராஜுடன் கை கோர்த்தார்..

711
sivakrthikeyan

அதே வருடத்தில் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்..இந்த இரண்டு படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது..அதோடு வருத்தப்படாத வாலிபர் சங்கம் அவருக்கு டெர்னிங் பாயிண்ட் என்றும் சொல்லலாம்.. 

811
sivakrthikeyan

பின்னர் மான் கராத்தே,காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ என அடுக்கடுக்கான ரசிகர் ஈர்ப்பு படங்களை கொடுத்தார் சிவகார்த்தியேகன் .இதன் மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏகபோகமானது..

911
sivakrthikeyan

2018-ம் ஆண்டு கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்த எஸ்.கே...  நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, டான், வாழ், உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தற்போதும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸும் இணைந்து டாக்டர் படத்தை தயாரித்துள்ளனர்.

1011
sivakarthikeyan

பாடகராகவும், படலாசிரியராகவும் கலக்கி வரும் சிவகார்த்தியேன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, கனா, மாப்பிளை சிங்கம், தும்பா உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.. அதேபோல கோலமாவு கோகிலா, கூர்க்கா, டாக்டர்,பீஸ்ட்  உள்ளிட்ட படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார்.  

1111
sivakrthikeyan

இந்நிலையில் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிக்க ஆரம்பித்து 10 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக தன்னை முதலில் அறிமுகப்படுத்திய இயக்குனர் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் மடல் எழுதியுள்ளார்..

Read more Photos on
click me!

Recommended Stories