Amaran Movie
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாக வெற்றி படத்தை கொடுக்க தொடர்ந்து போராடி வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'அயலால்' வேற்றுகிரகவாசி கான்செப்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், படுதோல்வியை சந்தித்தது. சினிமாவில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொள்ள, வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சிவகார்த்திகேயன் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கடின உழைப்பை செலுத்தி, மிகுந்த சிரத்தை எடுத்து நடித்து வந்த திரைப்படம் அமரன்.
Mukund Varatharajan Biopic
தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் பற்றிய வாழ்க்கையே படமே எடுக்கப்பட்டிருந்த நிலையில்... முதல் முறையாக நம் தேசத்திற்காக போராடி உயிர் நீத்த தலைவர் ஒருவரை பற்றி எடுக்கப்பட்டிருந்த படம் அமரன் என்பதால், இந்த படம் தமிழக மக்களை தாண்டி, மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.
புயல் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!
Sivakarthikeyans Amaran Movie Update
இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில், உலக நாயகன் கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில், சாய் பல்லவியின் நடிப்புதான் அதிகம் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படம் 29 நாட்களில், ரூ.322 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.
Amaran OTT Release Date
அமரன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றிய நிலையில், இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே இப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமரன் திரைப்படம் அடுத்த வாரம் அதாவது, டிசம்பர் 5-ஆம் தேதி ஓடிடியில் ஆக உள்ளது. அமரன் திரைப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து, இந்த படத்தை ஓடிடியில் 28 நாட்களில் வெளியிட கூடாது என, திரையரங்கு உரிமையாளர்கள் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு கோரிக்கை வைத்த நிலையில், 28 நாட்களில் இந்த படத்தை வெளியிடாமல் ஒரு மாதம் கழித்து வெளியிடுகிறது நெட்பிலிக்ஸ்.