தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு நிகராக ஹீரோயினுக்கு படங்களில் முக்கியத்துவம் கிடைப்பதே அரிதானது. இப்படியிருக்க ரசிகர்கள் பவர், சோசியல் மீடியா ட்ரெண்டிங் என டாப் ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் விதமாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கெத்து காட்டி வருகிறார். சினிமாவே வேண்டாம் கல்யாணம் செஞ்சிக்கிட்டு செட்டில் ஆகிடலாம் என முடிவெடுத்த நயன்தாராவிற்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ச்சி, இப்போது லேடி சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர காரணமாகியுள்ளது.
சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பிறகும் அசராத நயன்தாரா தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி. காதலரின் தயாரிப்பில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில், படம் ஒடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இந்த படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் ரூ.27 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், ஓடிடியில் திரைப்படம் வெளியாக உள்ளதாகவும் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
தற்போது ‘நெற்றிக்கண்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்றும் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் இரண்டு குட் நியூஸாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி, பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தற்போது இந்தியில் இயக்க உள்ள படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகையான கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “பக்ரீத் நாளில் ஒரு முக்கிய செய்தி, வெற்றிக்கூட்டணியான ஷாரூக்கான், நயன்தாரா அட்லீ, ஏ.ஆர்.ரஹ்மான் இணைய உள்ளனர். ஒரே படத்தில் எனக்கு விருப்பமான அனைவரும் நடிக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
கஸ்தூரியின் இந்த ட்விட்டர் பதிவை அடுத்து நயன்தாராவிற்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டாடும் விதமாக லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் #Nayanthara என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். எங்க போறப்போக்கைப் பார்த்தால் விஜய், அஜித்தை எல்லாம் கூட சோசியல் மீடியாவில் நயன் பின்னுக்குத் தள்ளிவிடுவார் என கிசுகிசுக்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.