சூர்யா திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா, பிதாமகன் ஆகிய படங்களுக்கு அடங்கும். இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாலா இணையவே இல்லை. இந்நிலையில் சுமார் 18 வருடங்களுக்கு பின் மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
கடைசியாக பாலா நடிகர் விக்ரம் மகன் துருவை வைத்து இயக்கிய 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தெலுங்கு பட ரீமேக் பமான 'வர்மா' திரையரங்கில் வெளியாகாத நிலையில், மீண்டும் 'ஆதித்திய வர்மா' என்கிற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். பின்னர் கடந்த ஆண்டு, பாலாவின் 'வர்மா' படம், ஓடிடி தளத்தில் வெளியாகி சில விமர்சனங்களுக்கு ஆளாது.
இதை தொடர்ந்து தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷை வைத்து 'விசித்திரன்' என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்காக ஆர்.கே.சுரேஷ் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து சுமார் 18 கிலோ வரை எடையை குறைத்து நடிக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் பாலா அடுத்தாக யாரை வைத்து படம் இயக்குவார் என கேள்வி எழுந்த நிலையில், தற்போது நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நடிகை ஜோதிகா பாலா இயக்கத்தில் நடித்த 'நாச்சியார்' படத்தின் போது, சூர்யாவிடம் ஒரு ஒன் லைன் கூறியதாகவும், இது பிடித்து போன சூர்யா கதையை தயார் செய்ய கூறியுள்ளார். தற்போது அந்த படத்தின் கதையை முடித்த பாலா சூர்யாவிடம் கதையை கூறி ஓகே வாங்கிவிட்டாராம்.
எனவே சுமார் 18 வருடங்களுக்கு பின், மீண்டும் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.