பாடகி ஜானகியின் ஒரே ஒரு மகன் முரளி கிருஷ்ணா காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி

Published : Jan 22, 2026, 01:22 PM IST

பிரபல பின்னணி பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

PREV
12
Singer S Janaki Son Passes Away

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகிகளில் ஒருவராக விளங்குபவர் ஜானகி. 17 மொழிகளில் 45,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ள இவர், ரசிகர்களால் ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என அன்புடன் அழைக்கப்படுகிறார். நான்கு தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என ஏராளமான விருதுகளை குவித்துள்ள ஜானகி, இசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.

2013-ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டபோதும், அது தமக்கு தாமதமாக வழங்கப்பட்டதாக கூறி அதை ஏற்க மறுத்தார். பின்னர் 2016-ஆம் ஆண்டு திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஜானகி, ஹைதராபாத்தில் தனது மகனுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

22
பாடகி ஜானகியின் மகன் மரணம்

இந்த சூழலில், ஜானகியின் மகனும் நடிகருமான முரளி கிருஷ்ணா இன்று (ஜனவரி 22) காலமானார். அவரது மறைவு திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயாருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணா, உடல்நலக்குறைவால் காலமானார்.

முரளி கிருஷ்ணாவின் மனைவி பெயர் உமா. அவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞர் ஆவார். இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் உண்டு. அவர்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக உமாவை விவாகரத்து செய்து பிரிந்த முரளி கிருஷ்ணா தன் அம்மா ஜானகி உடன் வசித்து வந்தார்.

முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், இசை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசை உலகுக்கு அளவற்ற சேவை செய்த ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவம், ரசிகர்களின் மனங்களையும் கனத்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories