மறைந்த பாடகர் கே.கேவின் இறுதிச் சடங்கு.. வெர்சோவா தகன மையத்தில் நடைபெறுகிறது...

Kanmani P   | Asianet News
Published : Jun 02, 2022, 03:20 PM ISTUpdated : Jun 02, 2022, 03:23 PM IST

பாடகர் கேகே செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் காலமானார். அவரது உடல் மீண்டும் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை பிற்பகல் வெர்சோவா இந்து மயானத்தில் தொடங்கியுள்ளது.

PREV
14
மறைந்த பாடகர் கே.கேவின்  இறுதிச் சடங்கு.. வெர்சோவா தகன மையத்தில் நடைபெறுகிறது...
singer kk

கிருஷ்ணகுமார் குன்னத் என்ற இயற்பெயரை கொண்ட பாடகர் கேகே, காதலின் இசை என ரசிங்கர்களால் கொண்டாடப்படுபவர். 3 தலைமுறை ரசிகர்களை வசீகரித்திருந்த  கேகே. கடந்த செவ்வாய் கிழமை  (மே 31) கொல்கத்தாவில் நடைபெற்ற லைவ் நிகழ்ச்சியின் முடிவில்  நோய்வாய்ப்பட்டார்.

24
singer kk

நிகழ்ச்சியின் இறுதியில் நிதானிக்க முடியாத காரணத்தால் தன்னுடன் இருந்தவர்களின் உதவியுடன் ஸ்டேஜில் இருந்து புறப்பட்ட கேகே. அவர்  தங்கியிருந்த ஓட்டல் ரூமுக்கு செல்ல முயன்ற போது மயங்கி விழுந்த கேகே அதே இடத்தில் உயிரிழந்தார். தமிழில் இன்றளவும் காதல் கீதமாக இருக்கும் பல பாடல்களுக்கு குரல் கொடுத்த இவரின் மரணம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

34
singer KK

இதையடுத்து காவல் துறை வழக்கு பதிவு செய்து கேகே வின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் அவரது உடல் மீண்டும் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது மற்றும் இறுதிச் சடங்குகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் வெர்சோவா இந்து மயானத்தில் தொடங்கியுள்ளது. அவரது உடல் முன்னதாக அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 

44
singer kk

இன்று தகனம் செய்யப்படும் நிலையில்  கே.கே.வின் திரையுலகம் மற்றும் இசைத்துறை சகாக்கள் இறுதிச் சடங்கிற்கு வந்து பாடகருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கே.கே.யின் மனைவி ஜோதி மற்றும் அவர்களது மகன் நகுல் ஆகியோர் தகனம் செய்யும் இடத்தில் தங்கள் உறவினர்களுடன் உள்ளனர்.

click me!

Recommended Stories