சேவை செய்யப்போறேன் என கூறியது சும்மாவா..? ரகசிய திருமணம் செய்துகொண்ட சிம்பு பட நாயகி..!

First Published | Nov 22, 2020, 12:14 PM IST

திரையுலகை விட்டு மொத்தமாக விலகுகிறேன் என்றும், சேவை செய்ய தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணிக்க போவதாக கூறிய நடிகை சனா கான் திடீர் என ரகசிய திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

தமிழில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படம் மூலம் அறிமுகமானவர் இளம் நடிகை சனா கான். அதன் பின்னர் தமிழில் பயணம், ஒரு நடிகையின் டைரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சனா கான் திடீரென சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
Tap to resize

இதுகுறித்து சோசியல் மீடியா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சனா கான், இந்த உலகத்தில் மனிதன் தோன்றிய உண்மையான நோக்கம் பணத்தையும், புகழையும் துரத்துவதற்குத்தானா? மனிதன் தன் வாழ்க்கையைத் தேவைப்படுபவர்களுக்கு, வறியவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அந்த வாழ்க்கை கடமையில் ஒரு அங்கம் இல்லையா?.
ஒரு நபர், தான் எப்போது வேண்டுமானாலும் இறந்து போகலாம் என்பதையும், அவர் இறந்த பிறகு அவருக்கு என்ன ஆகும் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டாமா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் நீண்ட காலமாக நான் பதில் தேடி வருகிறேன். அதுவும் குறிப்பாக என் மரணத்துக்குப் பின் எனக்கு என்ன ஆகும் என்கிற கேள்விக்கு. எனது மதத்தில் இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும்போது, பூமியில் இந்த வாழ்க்கையே, மரணத்துக்குப் பிறகான வாழ்க்கையை மேம்படுத்தத்தான் என்பதை உணர்ந்தேன்.
எனவே படைத்தவனின் ஆணைக்கு இணங்க மனிதனின் பாவட்ட வாழ்க்கையை தவிர்த்து, மனித இனத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளேன் என கூறினார்.
இன்று ஒரு விஷயத்தை அறிவிக்கிறேன். இன்று முதல் திரைத்துறை வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக விடை பெறுகிறேன் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் திடீரென சனாகான் திருமணம் செய்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை சனாகான் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் திருமணத்திற்கு பின்னர் சனாகான் தனது கணவருடன் மாடியில் இருந்து இறங்கி வரும் காட்சிகளும், இருவரும் கேக் வெட்டும் காட்சிகளும் உள்ளன. இந்த திருமணம் எப்போது நடந்தது என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!