silk smitha earned more than heroines for item dance : 80'ஸ் காலகட்டத்திலேயே நடிகை சில்க் ஸ்மிதா, ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு மட்டும் ரூ.50 ஆயிரம் வரையில் சம்பளம் வாங்கி உள்ளார்.
silk smitha earned more than heroines for item dance : ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவருடைய உண்மையான பெயர் வடல்பட்டி விஜயலட்சுமி. சினிமா தான் அவருக்கு சில்க் ஸ்மிதா என்ற ஒரு அடையாளத்தை கொடுத்தது. தமிழ், தெலுங்கு, மலையளம், கன்னடம், ஹிந்தி என்று பல மொழிகளில் 450க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திய சில்க் ஸ்மிதாவை இளம் வயதிலேயே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு கணவர் மற்றும் மாமியார் கொடுமை தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.
27
டச் அப் ஆர்டிஸ்ட்:
நடிகை அபர்ணாவிற்கு டச் அப் ஆர்டிஸ்டாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய சில்க் ஸ்மிதாவிற்கு இணைய தேடி (Inaye Thedi) என்ற மலையாள படம் தான் சினிமா வாய்ப்பு கொடுத்தது. மலையாள இயக்குநர் ஆண்டனி ஈஸ்ட்மேன் தான் சில்க் ஸ்மிதாவிற்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுத்தார். அதோடு ஈஸ்ட்மேன் தான் அவருக்கு ஸ்மிதா என்று பெயரை கொடுத்தார்.
37
சில்க் ஸ்மிதாவிற்கு அடையாளம் கொடுத்த வண்டிச்சக்கரம்:
ஆனால், அதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் வினு சக்கரவர்த்தி தான் சில்க் ஸ்மிதாவிற்கு நல்ல ஒரு அடையாளத்தையும், சினிமாவில் அங்கீகாரத்தையும் கொடுத்தார். ஆம், வண்டிச்சக்கரம் படத்தில் நடிக்க வைத்து பிரபலமாக்கினார். அதோடு இந்தப் படத்தில் சில்க் என்ற ரோலில் நடித்த ஸ்மிதா நாளடைவில் சில்க் ஸ்மிதா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
47
ஐட்டம் டான்ஸ் கை கொடுக்க ஆரம்பித்தது:
சினிமாவில் நடிக்க தொடங்கிய போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. ஆனாலும், பெரிய அளவிற்கு அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. அவர் ஒரு டான்சர் இல்லை என்றாலும், இவருக்கு ஐட்டம் டான்ஸ் கை கொடுக்க ஆரம்பித்தது. அப்படித்தான் வண்டிச்சக்கரம் படத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
57
தூண்டில் போட்டு இழுக்கும் கண்கள்:
கடந்த 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்தார் சில்க் ஸ்மிதா. 80ஸ் காலகட்டத்தில் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். தூண்டில் போட்டு இழுக்கும் அவரது கண்களுக்கு பல ரசிகர்கள் மயங்கினார்கள். அவ்வளவு சக்தி அவரின் கண்களுக்கு இருந்தது. மலையாளம் மற்றும் தமிழ் ஹீரோக்கள் தங்களின் படங்களில் சில்க் ஸ்மிதாவின் பாடல்கள் தங்களுடைய படங்களில் இடம்பெற வேண்டும் என விரும்பினார்கள்.
67
ரூ.50 ஆயிரம் வரையில் சம்பளம்:
ஒரே ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு, ரூ.50 ஆயிரம் வரையில் சம்பளம் பெற்று வந்தாராம் சில்க். இது இன்றைய காலகட்டத்தில் ரூ.5 கோடிக்கு நிகர் என கூறப்படுகிறது. அதாவது ஹீரோயினை விட அதிகமாக 10 5 நிமிட பாடலுக்கு சம்பளமாக பெற்றாராம். டான்ஸர், வில்லி ரோல், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கிய போது படம் தயாரிக்க தொடங்கினார். அப்போது அவருக்கு ரூ.2 கோடி வரையில் நஷ்டம் ஏற்படவே மதுப் பழக்கத்திற்கு அடிமையானார்.
77
அடிக்கடி சர்ச்சை:
இதனால் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி வந்தார். கடைசியில் மன அழுத்தம், சோகம் தாங்க முடியாத சில்க் ஸ்மிதா தனது 35ஆவது வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. ஆனால், அவர் மறைந்தாலும் அவரின் மரணத்தை சுற்றி பின்ன பட்ட மர்ம முடிச்சுகள் தற்போது வரை அவிழவில்லை. இதுவரை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி, 3 படங்கள் வெளியாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.