பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகராக கொண்டாடப்படுபவர் அமீர்கான். அவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் 1990களில் வெளிநாட்டில் நடைபெற்ற ஒரு பார்ட்டிக்கு தான் அழைக்கப்பட்டதாகவும், பணம், பட வாய்ப்புகள், மிரட்டல்கள் என அனைத்தையும் மீறி தான் அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் அமீர்கான் கூறினார்.
24
அமீர்கானுக்கு வந்த மிரட்டல்
1980 மற்றும் 90களில், இந்தி சினிமாவில் அண்டர்வேர்ல்டின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. 1988ல் வெளியான 'கயாமத் சே கயாமத் தக்' படத்தின் மூலம் அமீர்கான் பிரபலமானார். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது. 1990களின் பிற்பகுதியில், அமீர்கானின் புகழ் உச்சத்தில் இருந்தபோது, துபாயில் நடைபெற்ற ஒரு பார்ட்டிக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவர் அந்த அழைப்பை மறுத்துவிட்டார். அமீர்கானின் மறுப்பை ஏற்க மறுத்த அவர்கள், பலமுறை தனக்கு பணம், பட வாய்ப்புகள் என பலவற்றை வழங்குவதாக கூறியும் அமீர்கான் அந்த டீலுக்கு நோ சொல்லிவிட்டாராம்.
34
ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன அமீர்கான்
பின்னர் அவர்கள் தங்கள் தொனியை மாற்றி, அந்த விருந்துக்கு அமீர்கான் வருவார் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டதால், அவர் வரவில்லை என்றால் அது தங்களுக்கு அவமானம் என்று மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் அமீர்கான் அசைந்து கொடுக்கவில்லை. "நான் அவர்களிடம் தெளிவாகக் கூறினேன், 'நான் உங்கள் விருப்பப்படி வாழ விரும்பவில்லை. உங்கள் வழியில் செல்ல நான் தயாராக இல்லை.' ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்கள் என்னை சந்திக்க வந்தார்கள், ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். 'நீங்கள் என்னை அடிக்கலாம், கட்டி இழுத்துச் செல்லலாம், ஆனால் நான் என் விருப்பப்படிதான் வருவேன்' என்று கூறினேன்.
இந்த துணிச்சலான முடிவுக்குப் பிறகு, அவர்கள் அமீர்கானை மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. "அதுதான் எங்கள் கடைசி சந்திப்பு. அதன் பிறகு அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை," என்று அமீர்கான் கூறினார். ஆனால் இந்த சம்பவம் அவரை மிகவும் பயமுறுத்தியது, குறிப்பாக அவரது குடும்பத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. ஏனெனில் அப்போது அமீர்கானுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். 1986ல் அவர் திருமணம் செய்து கொண்ட ரீனா தத்தா மற்றும் அவரது குடும்பத்தின் பாதுகாப்பைப் பற்றியும் அவர் கவலைப்பட்டார்.
1990களில், அண்டர்வேர்ல்ட் பாலிவுட்டில் பெரும் செல்வாக்கு செலுத்தியது. அவர்கள் படத் தயாரிப்புகளுக்கு நிதியளித்தனர், நடிகர்களை தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தினர். மறுத்தவர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. 1997ல் டி-சீரிஸின் நிறுவனர் குல்ஷன் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது, அமீர்கான் தனது சமீபத்திய படமான 'சித்தாரே ஜமீன் பர்' படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார். 2007ல் வெளியான 'தாரே ஜமீன் பர்' படத்தின் தொடர்ச்சியான இந்தப் படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.