நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் முன் என்ன செய்துவிட்டார் என திவ்யா சத்யராஜ் கேள்வி எழுப்பி இருந்த நிலையில். அதற்கு அவரின் உடன்பிறந்த அண்ணன் சிபிராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் விஜய் தற்போது அரசியலில் குதித்து இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அதன்பின்னர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார். குடும்ப நீதிமன்றில் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு, கரூர் சம்பவம், ஜன நாயகன் படத்தின் சென்சார் சிக்கல், சிபிஐ விசாரணை என ஒவ்வொரு திசையிலிருந்தும் தடைகள் குவிகின்றன. இருப்பினும், கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு அவருக்கு துணையாக நிற்கிறது. அதனால் அரசியலில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்.
24
கேள்வி எழுப்பிய திவ்யா சத்யராஜ்
இந்த நிலையில், நடிகர் சத்யராஜின் மகளும், திமுக நிர்வாகியுமான திவ்யா சத்யராஜ், சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் விஜய்யை நோக்கி இரண்டு கேள்விகளை முன்வைத்தார். "அரசியலுக்கு வரும் முன் மக்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்பது முதல் கேள்வி. இதற்கு தன்னையே உதாரணமாக காட்டிய அவர், தனது அன்னையின் நினைவாக தொடங்கிய அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் வழங்கி வருவதை கூறி இருந்தார்.
34
பதிலடி கொடுத்த சிபிராஜ்
அடுத்ததாக "பெரியாரை கொள்ளை தலைவராக வைத்திருக்கும் உங்கள் கட்சிக்காரர்கள் பெண்களை அவமதிக்கிறார்களே?" என்பது இரண்டாவது கேள்வி. இதில் திவ்யா சத்யராஜின் முதல் கேள்விக்கு பதிலடி கொடுத்தது யார் தெரியுமா? வேறு யாருமல்ல, திவ்யாவின் சகோதரர் சிபிராஜ். சத்யராஜின் மகனும் திவ்யாவின் அண்ணனுமான சிபிராஜ், விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அதேபோல் விஜய்யை விமர்சிப்பவர்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது திவ்யா சத்யராஜின் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் சிபி.
சத்யராஜ் நடித்த அரசியல் படமான அமைதிப்படையிலிருந்து, "மணியா வரலாறை தெரிஞ்சுக்க" என்ற ஐகானிக் வசனத்தை தனது Instagram ஸ்டோரியில் பதிவிட்ட சிபிராஜ், விஜய் இயற்கை பேரிடர்களுக்கு நிதி உதவி செய்தது, உள்பட அவர் இதுவரை என்னென்ன உதவிகளெல்லாம் செய்திருக்கிறார் என்பதை வீடியோ தொகுப்பாக இணைத்து வெளியிட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் உடன் பிறந்த சகோதரி என்றுகூட பார்க்காமல் இப்படியா தக் லைஃப் கொடுப்பது என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் இந்த புரூஃப் போதுமா இன்னும் வேணுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.