Shruti Hassan: வலி நிறைந்த வாழ்வுக்கு இசையே மருந்து.! சுருதி ஹாசனின் உருக்கமான பேட்டி.!

Published : Feb 03, 2026, 02:57 PM IST

நடிகை சுருதி ஹாசன், கடுமையான மனஅழுத்தம் காரணமாக சினிமாவிலிருந்து நீண்ட இடைவேளை எடுத்தார். லண்டனில் இசையில் கவனம் செலுத்தியதன் மூலம் மன ஆரோக்கியத்தை மீட்டெடுத்து, புத்துணர்ச்சியுடன் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பியுள்ளார்.

PREV
15
இசையால் மீண்டெழுந்த சுருதி ஹாசன்

திரைப்பயண இடைவேளை குறித்த உருக்கமான பகிர்வு

பாட்டு, நடிப்பு என அசத்தி வரும் நடிகை ஸ்ருதிஹாசன் தனது உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக பேசியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் சரிகாவின் மகளாக அறிமுகமான சுருதி ஹாசன், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெற்றிகரமான நாயகியாக வலம் வருகிறார். ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வந்த அவர், திடீரென ஒரு நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டார். இது குறித்து அண்மையில் அவர் மனம் திறந்து பேசிய கருத்துக்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. நம்ம தேவதை எப்போதுமே ஓபன் டைப் என ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.

25
இடைவேளைக்கான காரணம் சொல்லம் ஸ்ருதி ஹாசன்!

காந்த பார்வை கொண்ட சுருதி ஹாசன் தனது திரைப்பயணத்தில் எடுத்த அந்த இடைவேளை என்பது தற்செயலானது அல்ல எனவும் அது  திட்டமிட்டு எடுத்த ஒரு முடிவு எனவும்  கூறுகிறார். பிசியாக நடித்துக்கொண்டு இருந்த போது ஒருவிதமான கடுமையான மனஅழுத்தம் மற்றும் குழப்பத்தில் இருந்ததாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். நான் யார்? நான் எதைத் தேடுகிறேன்? என்ற தெளிவு இல்லாமல் இருந்த அந்தச் சூழலில், அன்றாடப் பணிகளைக் கூடச் செய்ய இயலாத அளவுக்கு தான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிட்டார். அந்த் தருணத்தில் தனது மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவே சினிமாவிலிருந்து விலகி இருக்க முடிவு செய்ததாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

35
இசை அளித்த புதுவாழ்வு.!

இந்த இக்கட்டான காலத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு பெரும் துணையாக இருந்தது இசைதானாம். லண்டனில் தங்கியிருந்த போது, எந்தவித எதிர்பார்ப்புமின்றி இசைப் பயிற்சியிலும், பாடல்கள் எழுதுவதிலும் தனது நேரத்தைச் செலவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சினிமா என்பது ஒரு பிரம்மாண்டமான உலகம் என்றும்  ஆனால் இசை என்பது எனது ஆன்மாவுடன் கலந்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார். லண்டனில் தனியாக வாழ்ந்த அந்த நாட்கள், சுயமாக சமைப்பது, துணி துவைப்பது போன்ற சாதாரண வேலைகளைச் செய்வது என ஒரு சாமானியராக வாழ்ந்த அனுபவம் அவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வந்தது.

45
மீண்டு வந்த விதம்.!

இசை மற்றும் பாடல்கள் மூலமாக தன்னைத் தானே கண்டறிந்த சுருதி, மீண்டும் புத்துணர்ச்சியுடன் திரையுலகிற்குத் திரும்பியுள்ளார். அந்த இடைவேளை தனக்கு ஒரு மறுபிறப்பு போன்றது என்றும், அந்த அனுபவத்தை எதற்காகவும் தான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். தற்போதைய நிலையில், நடிப்பைப் போலவே சுயாதீன இசைக்கும் சமமான முக்கியத்துவத்தை அவர் அளித்து வருகிறார்.

55
மன அமைதியே ஒரு கலைஞருக்கு மிக முக்கியம்.!

வெற்றி, தோல்வி, புகழ் என அனைத்தையும் கடந்து, மன அமைதியே ஒரு கலைஞருக்கு மிக முக்கியம் என்பதைச் சுருதி ஹாசனின் இந்த முடிவு உணர்த்துகிறது. இருளில் இருந்த தனக்கு இசை ஒரு வெளிச்சமாக அமைந்து, மீண்டும் தன்னை ஒரு சிறந்த கலைஞராகச் செதுக்கியதாக அவர் பெருமிதத்துடன் பகிர்கிறார். தற்போது அவர் தனது நடிப்புத் திறமையாலும், ஆழமான இசையாலும் ரசிகர்களைத் தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories