அடுத்த மெகா சங்கமம் இந்த 2 சீரியல்கள் தான்.. சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் குஷி

Published : Feb 03, 2026, 01:37 PM IST

சன் டிவியில் தற்போது ‘சிங்கப்பெண்ணே’ மற்றும் ‘மூன்று முடிச்சு’ சீரியல்களின் மெகா சங்கமம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சன் டிவியின் அடுத்த மெகா சங்கமம் குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

PREV
15
சன் டிவி மெகா சங்கமம்

தமிழ் மக்களின் வாழ்க்கையில் சீரியல்கள் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டன என்றே கூறலாம் அந்த வகையில், பல ஆண்டுகளாக முன்னணி சேனலாக திகழ்ந்து வரும் சன் டிவி, தொடர்ந்து புதிய முயற்சிகளாலும், விறுவிறுப்பான திருப்பங்களாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறது. காலை 10 மணியிலிருந்து இரவு நேரம் வரை இடைவிடாது ஒளிபரப்பாகும் சீரியல்கள், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் பொழுதுபோக்காகவே உருவெடுத்துள்ளன.

25
சிங்கப்பெண்ணே சீரியல்

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிங்கப்பெண்ணே’ மற்றும் ‘மூன்று முடிச்சு’ சீரியல்கள் இணையும் மெகா சங்கமம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான கதைக்களத்தைத் தாண்டி, இரு தொடர்களின் முக்கியக் கதாப்பாத்திரங்கள் ஒரே நிகழ்வின் போது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகின்றன.

35
மூன்று முடிச்சு சீரியல்

இந்த சங்கமம் சீரியல் உலகில் ஒரு சிறப்பு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இந்த மெகா சங்கத்தின் முக்கிய அம்சமாக தற்போது கபடி போட்டி காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. கதாபாத்திரங்களுக்கிடையேயான போட்டி உணர்வும், விளையாட்டின் விறுவிறுப்பும் சேர்ந்து, எபிசோடுகளை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது.

45
சன் டிவி சீரியல் அப்டேட்

இதற்கிடையே, சன் டிவியின் அடுத்த மெகா சங்கமம் குறித்த தகவலும் தற்போது கிசுகிசுக்கப்படுகிறது. டிஆர்பி பட்டியலில் முன்னணியில் இருக்கும் ‘கயல்’ மற்றும் ‘மருமகள்’ சீரியல்கள் இணைந்து புதிய சங்கமம் ஒன்றை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்கும் தனித்தனியான ரசிகர் வட்டாரம் இருப்பதால், இந்த இணைப்பு பெரிய கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
கயல் சீரியல்

இருப்பினும் இந்த புதிய மெகா சங்கமம் குறித்து சேனல் தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், தொடர்ச்சியாக நடைபெறும் இந்த வகை மெகா சங்கமங்கள், சன் டிவி சீரியல்களை மேலும் விறுவிறுப்பாக மாற்றி, டிஆர்பி போட்டியில் சேனலை முன்னிலையில் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories