தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பாடி இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக வலம் வருபவர் ஷ்ரேயா கோஷல் இவர் தமிழிலும் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான் என பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக பிதாமகன் படத்தில் வரும் இளங்காத்து வீசுதே, சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா, விடிவி படத்தில் வரும் மன்னிப்பாயா, எதிர்நீச்சல் படத்தில் வரும் வெளிச்சப் பூவே என பல பிளாக்பஸ்டர் ஹிட் பாடல்களும் அதில் அடங்கும்.
24
Shreya Ghoshal song controversy
இந்நிலையில், பாலிவுட்டில் ஒரு ஐட்டம் பாடலை பாடியதற்காக தான் வருந்துவதாக ஷ்ரேயா கோஷல் சமீபத்திய பேட்டியில் கூறி இருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அதன்படி இந்தியில் கடந்த 2012-ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் அக்னி பத். இப்படத்தில் இடம்பெற்ற சிக்கினி சம்மேலி (chikni chameli) எனகிற ஐட்டம் சாங் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. அப்பாடலுக்கு நடிகை கத்ரீனா கைஃப் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
அந்தப்பாடலை பாடியதற்காக தான் வருந்துவதாக ஷ்ரேயா கோஷல் கூறி இருக்கிறார். ஏனெனில் அந்தப் பாடலின் அர்த்தம் என்னவென்றே தெரியாமல் குழந்தைகளும் அதை ரசிப்பதாகவும், அதற்கு நடனமாடுவதாகவும் கூறி உள்ள ஷ்ரேயா கோஷல், அந்தப் பாடல் நன்றாக இருக்கிறது என தன்னிடமே வந்து கூறும் போது தனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 5, 6 வயது குழந்தைகள் கூட இந்த பாடல்களை பாடுகிறார்கள். அது சரியல்ல. அப்பாடலை பாடியதற்காக நான் வெட்கப்படுகிறேன் என கூறி உள்ளார்.
44
Shreya Ghoshal not happy with chikni chameli song
மேலும் இதுபோன்ற பாடல்களை ஆண்கள் எழுதுவதால் அவற்றில் பெண்களை இழிவுபடுத்தும்படியான வரிகள் அதிகம் இருப்பதாகவும், அதுவே ஒரு பெண் எழுதினால் வேறு ஒரு கண்ணோட்டத்தில் எழுதுவார் எனவும் ஷ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ஏனெனில் அண்மையில் இந்தியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் இப்பாடலை மிகவும் ரசித்து பாடியதாக குறிப்பிட்டு அந்த காணொளியை வைரலாக்கி வருகின்றனர்.