இந்தியாவின் பணக்கார பாடகி ஷ்ரேயா கோஷல்; இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

Published : Mar 12, 2025, 09:03 AM IST

பாடகி ஷ்ரேயா கோஷல் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
இந்தியாவின் பணக்கார பாடகி ஷ்ரேயா கோஷல்; இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

Singer Shreya Ghoshal Birthday : பாடகி ஷ்ரேயா கோஷல், மார்ச் 12, 1984 அன்று மேற்கு வங்காளத்தின் பிரம்மபூரில் பிறந்தார். பெங்காலி பிராமண குடும்பத்தைச் சேர்ந்த ஷ்ரேயா கோஷல் ராஜஸ்தானின் கோட்டா அருகே உள்ள ராவத்பட்டாவில் வளர்ந்தார். ஷ்ரேயாவின் தந்தை விஸ்வஜித் கோஷல் ஒரு எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் மற்றும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் பணிபுரிகிறார். ஷ்ரேயாவுக்கு 4 வயதாக இருந்தபோது பாடத் தொடங்கினார். ஷ்ரேயா 6 வயதாக இருந்தபோது இசையில் முறையான பயிற்சி எடுக்கத் தொடங்கினார். 

25
Shreya Ghoshal

2000 ஆம் ஆண்டு தனது 16 வயதில் 'சரிகமபா' இசை நிகழ்ச்சியில் வெற்றியாளரான ஷ்ரேயா கோஷல், கடந்த 2002-ம் ஆண்டு வெளியான சஞ்சய் லீலா பன்சாலி திரைப்படமான 'தேவதாஸ்' மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டு கார்த்திக் ராஜா இசையில் தமிழில் உருவான ஆல்பம் திரைப்படத்திற்காக ‘செல்லமே செல்லம்’ என்கிற பாடலை பாடினார். தமிழில் அவர் பாடிய முதல் பாடலே பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனதை தொடர்ந்து அவருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... சுத்தமா தமிழ் தெரியாத ‘இந்த’ பாடகி தமிழில் பாடிய எல்லா பாடல்களும் ஹிட்! யார் இவர்?

35
Shreya Ghoshal Birthday

தமிழில் மட்டும் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் ஷ்ரேயா கோஷல். இதில் பெரும்பாலானவை ஹிட் பாடல்கள் தான். இவருக்கு மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இதில் இந்தியில் இவர் பாடிய முதல் படமான தேவதாஸ் படத்துக்காக தன் முதல் தேசிய விருதை வென்றார் ஷ்ரேயா கோஷல். இதையடுத்து 2005-ம் ஆண்டு பஹேலி படத்துக்காகவும் 2007-ம் ஆண்டு ஜப் வே மெட் படத்துக்காகவும் தேசிய விருது வென்ற இவருக்கு 2008-ம் ஆண்டு மட்டும் அண்டாஹீன் என்கிற பெங்காலி படத்துக்காகவும் 2021-ம் ஆண்டு இரவின் நிழல் படத்துக்காகவும் தேசிய விருது கிடைத்தது.

45
Shreya Ghoshal Net worth

ஷ்ரேயா கோஷல் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி சுமார் 185 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரியாக உள்ளார் ஷ்ரேயா கோஷல். இவர் ஒரு பாடலுக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இது தவிர, பிராண்ட் ஒப்புதல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றுவதன் மூலமும் ஷ்ரேயா சம்பாதிக்கிறார். 

55
Shreya Ghoshal Husband

ஷ்ரேயா கோஷலின் குடும்பத்தைப் பொறுத்தவரை, அவர் 2015 இல் தனது பால்ய நண்பரான ஷிலாதித்யா முகோபாத்யாயை மணந்தார். ஷிலாதித்யா ஸ்மார்ட்போன் செயலியான ட்ரூ காலரின் உலகளாவிய தலைவர். 2021 இல் ஷ்ரேயா கோஷல் மற்றும் ஷிலாதித்யாவுக்கு ஒரு மகன் பிறந்தான், அவனுக்கு தேவ்யான் என்று பெயரிட்டனர். 

இதையும் படியுங்கள்... "வெயிட்டு பார்ட்டி தான்" பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவர் 1400 கோடிக்கு அதிபதியாம் - யாருப்பா அவரு?

Read more Photos on
click me!

Recommended Stories