இளையராஜாவைப் போல் தானும் சிம்பொனி இசையை வெளியிட இருப்பதாக அவரிடம் இசைப் பயின்ற மாணவனும், இசைக் கலைஞருமான லிடியன் நாதஸ்வரம் சமூக வலைதளங்களில் கூறி இருந்தது வைரல் ஆனது. அதேபோல் இளையராஜா, லிடியனின் சிம்பொனி இசைக்கு உதவியதாகவும் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில், இதுபற்றி இளையராஜாவிடமே கேட்கப்பட்டது, அதற்கு அவர், லிடியன் என்னிடம் இசை கற்க வந்தவர். ஒரு முறை தான் சிம்பொனி இசையை உருவாக்கி இருப்பதாக சொல்லி போட்டுக்காட்டினார். 20 விநாடி கேட்டதும், இது என்ன சினிமா பின்னணி இசை மாதிரி இருக்கு. இது தப்பாச்சே... இது சிம்பொனியே இல்லை. முதலில் முறையாக சிம்பொனி என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு கம்போஸ் செய் என்று சொன்னதாக இளையராஜா கூறினார்.