தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'பட்டதாரி' படத்தின் மூலம் அதிதி மேனன் என்கிற பெயரில், கதாநாயகியாக அறிமுகமானவர் மிர்ணா. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த, நடிகர் அபி சரவணன் (விஜய் விஷ்வா) என்பவரை காதலிக்க துவங்கினார்.
பின்னர் இருவரும், சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். 3 வருடங்கள் ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், 2019 ஆம் ஆண்டு சில பிரச்சனைகள் எழ துவங்கியது. விஜய் விஷ்வா... படப்பிடிப்பிற்காக வெளியூருக்கு சென்ற போது, மிர்ணா வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டு தலைமறைவானார்.
இவரை பற்றிய உண்மைகள் வெளியாக துவங்கிய பின்னர்... மிர்ணா சென்னை பெருநகர காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் 'விஜய் விஷ்வா தன்னுடைய இமெயில் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தை ஹேக் செய்து, தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் பேன் கார்டு ஆகியவற்றின் தகவல்களை திருடியதாகவும். தனக்கு பட வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்களுக்கு மிரட்டல் விடுத்தது வருவதாகவும் தெரிவித்தார்'.
அதே போல் மிர்ணா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதாலும், தன்னை இளமையாகவும், அழகாவும் கட்ட சில ஊசிகள் போட்டு கொள்வதால், 4 முறை அபாஷன் செய்து தன்னுடைய குழந்தையை கலைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மிர்ணா விவாகரத்து கொடுக்காமல் தொடர்ந்து விஜய் விஷ்வாவை அலைக்கழித்து வருகிறார் என, ஜெயிலர் பட நடிகை மிர்ணா பற்றி பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.