'பாண்டியன் ஸ்டோர்' சீரியலின் முக்கிய பிரபலம் மாற்றமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

First Published | Mar 7, 2021, 4:48 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து, முக்கிய பிரபலம் ஒருவர் மாற்றப்பட உள்ளதாக  கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணன் - தம்பிகள் பாசம், என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றும், கூட்டு கும்பத்தில் உள்ளவர்கள் எப்படி விட்டு கொடுத்து வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து காட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'.
எனவே, இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் - நடிகைகளுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இந்த சீரியலில் திடீர் என முக்கிய பிரபலம் ஒருவர் மாற்றப்படுவதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tap to resize

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள. தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற பெயரிலும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் கூடுதல் சுவாரஸ்யம் என்றால், பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு, தங்களது வாழ்க்கையை ரசித்து வாழ துவங்கியுள்ள கதிர் - முல்லை காதல் காட்சிகள். அதே போல் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவும் தன்னுடைய சொதப்பல் செயல்களால் ரசிகர்களை கவர்ந்தவர்.
முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த, விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டு இறந்த பின்னர், தற்போது அவரது கதாபாத்திரத்தில் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்து வந்த காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். இவரது நடிப்பும் தற்போது ரசிகர்களை கவர்ந்து விட்டபோதிலும், சீரியல் தான் சற்று போர்ராக செல்வதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
எனவே கடந்த சில வாரங்களாக பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் சேர்ந்து ஒளிபரப்பாகி வந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலின் இயக்குனர் திடீர் என மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும், இதுகுறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!