இவர் தற்கொலை செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஹேம்நாத் என்பவரை பதிவு திருமணம் செய்துகொண்டார். தற்கொலை செய்தபோது அவர் ஹேம்நாத்துடன் இருந்ததால், சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த ஹேம்நாத் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.