பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜீன்ஸ் படத்தின் பாடல் காட்சியில் நாம் கவனிக்கத் தவறிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இன்று RRR, KGF, பாகுபலி போன்ற பிரம்மாண்ட படைப்புகள் பெரிதும் பேசப்படுகின்றன. ஆனால் இந்த அளவிலான விஷுவல் ஸ்பெக்டக்கிளை தமிழ் ரசிகர்களுக்கு 28 ஆண்டுகளுக்கும் முன்பே அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஷங்கர். அவர் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான படம் ஜீன்ஸ். பிரசாந்த், ஐஸ்வர்யா ராஜ் ஜோடியாக நடித்த இந்த படம், அப்போது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இன்று வரை பார்க்கும் போது கூட அந்த படம் தரும் “பிரெஷ்” அனுபவம் இன்னும் குறையாமல் இருப்பதே அதன் வெற்றியின் சான்று.
24
ஜீன்ஸ் படத்தின் மேஜிக்
இரட்டை மகன்கள், அவர்களின் திருமணத்தைச் சுற்றிய குழப்பங்கள், பொய்-உண்மை மோதல் என வழக்கமான கதைக்களம் தான். ஆனால் அதை மிகப்பெரிய அளவில் காட்சிப்படுத்திய விதமே படத்தின் பலம். அதிநவீன காட்சியமைப்பு, வித்தியாசமான லொக்கேஷன்கள், அந்நாளில் அரிதான விஷுவல் எஃபெக்ட்ஸ் என எல்லாம் சேர்ந்து படத்தை வேறு தரத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த படத்தின் கதாநாயகனாக முதலில் பலர் பரிசீலிக்கப்பட்டாலும், இறுதியில் அந்த வாய்ப்பு பிரசாந்த் கைக்கு வந்து சேர்ந்தது. அது அவரின் கரியரில் முக்கிய திருப்பமாக அமைந்தது. மேலும் ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து நடித்த முதல் ஹீரோ என்ற பெருமையும் அவருக்கே சேரும்.
34
பிரம்மாண்டத்தின் உச்சம்
ஏ.ஆர்.ரகுமான் இசையில் வந்த பாடல்கள் ஒவ்வொன்றும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக “அதிசயம்” பாடல் மூலம் உலகின் ஏழு அதிசயங்களையும் திரையில் காட்டிய விதம் அந்நாளில் பெரிய சாதனை. அந்த பாடலில் ஐஸ்வர்யா ராய் பல்வேறு நாட்டின் ராணி தோற்றங்களில் தோன்றியது கூட ஒரு சிறப்பு. ஒவ்வொரு காட்சியிலும், பாடலிலும் இயக்குநர் ஷங்கர் காட்டிய கவனம் மற்றும் உழைப்பே, ஜீன்ஸ் படத்தை காலத்தை கடந்த ஒரு கிளாசிக்காக மாற்றியுள்ளது. ஜீன்ஸ் படத்தில் நாம் கவனிக்கத் தவறிய விஷயம் ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற “கொலம்பஸ் கொலம்பஸ்” பாடல் அமெரிக்காவில் எடுத்தது போல காட்டியிருப்பார்கள். திரையில் பார்க்கும்போது அது அமெரிக்காவில் உள்ள ஏதோ ஒரு கடற்கரையில் எடுத்திருக்கிறார்கள் என்பது போன்று இருக்கும். ஆனால் உண்மையில் அப்பாடல் காட்சி சென்னையை அடுத்த மகாபலிபுரம் கடற்கரையில் செட் போட்டு படமாக்கப்பட்டதாம். இந்த தகவலை அப்படத்தில் பணியாற்றிய பிரபுதேவாவின் சகோதரர் ராஜு சுந்தரம் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள், இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.