உதவி இயக்குனராக இருந்து, பின்னர் இயக்குனராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான முதல் படமான 'வாலி' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், முதல் படத்திலேயே ஒட்டு மொத்த தமிழ் இயக்குநர்களாலும் கவனிக்க பட்ட இயக்குனராக மாறினார். அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான இந்த படம், தற்போது வரை, அஜித் ரசிகர்களின் ஃபேவரட் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
இரண்டு ஹிட் படங்களை கொடுத்த பின்னர் தானே ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார். ஆரம்பத்தில் இவர் நடித்த நியூ படத்திற்கு மட்டுமே வரவேற்பு கிடைத்த நிலையில் அடுத்தடுத்து வெளியான படங்கள், தோல்வியை சந்தித்தது. எனவே சில காலம் திரைப்படம் இயக்குவதற்கு கேப் விட்ட, எஸ்.ஜே.சூர்யா பின்னர் நடிகராக அறிமுகமாகி நடிக்க துவங்கினார்.
தற்போது விஜய் சேதுபதி பாணியில், ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என நடித்து அசத்தி வரும் எஸ்.ஜே.சூர்யா கல்லூரி காலங்களில், பார்ட் டைம் வேலை செய்து கொண்டே படித்தவர் தான். ஒரு உடலில் டேபிள் துடைக்கும் பணியை செய்ததாகவும், எனவே எந்த தொழில் செய்தலும் அதில் உயர்ந்தது - தாழ்ந்தது என்கிற பாகுபாடு கிடையாது என கூறியுள்ளார்.