Shivani Rajasekhar
‘மிஸ் இந்தியா’ போட்டியில் தமிழ்நாடு சார்பில், நடிகை ஷிவானி ராஜசேகர் பங்கேற்க இருந்த நிலையில், திடீரென தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு சார்பில் இந்தமுறை யாரும் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
Shivani Rajasekhar
இது குறித்து ஷிவானி ராஜசேகர் மேலும் பேசும்போது, ''நான் மலேரியாவால் பாதிக்கப்பட்டுவிட்டதால், அழகு பயிற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. மருத்துவ படிப்பிற்கான எழுத்துத் தேர்வு மற்றும் அடுத்த மாதம் பிராக்டிக்கல் தேர்வும் இருக்கிறது. இதனால், இவற்றில் நான் கவனம் செலுத்த இருப்பதால், இந்த ஆண்டு நடைபெறும் மிஸ் இந்தியா போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு நிச்சயம் கலந்து கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் அறிவிப்பால் இந்த ஆண்டு மிஸ் இந்தியா போட்டில் யாரும் கலந்து கொள்ள இயலாத சூழல் நிலவியுள்ளது.
மேலும் படிக்க....1100 திரையங்குகளில் யானை வெளியீடு...எனக்காக தான் எல்லாம்.? இயக்குனர் ஹரி குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி...