அடி தூள்.. புதிய அவதாரம் எடுத்த ஷிவாங்கி! பிக்பாஸ் செல்லும் போட்டியாளர் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்திய போஸ்ட்

First Published | Sep 17, 2021, 2:57 PM IST

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட, ஷிவாங்கி தற்போது அந்த நிகழ்ச்சிக்கே... தொகுப்பாளராக மாறியுள்ளதாக இவர் வெளியிட்டுள்ள போஸ்ட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

ஷிவாங்கி சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அவரை பட்டி தொட்டி வரை, பிரபலப்படுத்தியது என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
 

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இவர் புகழ், அஸ்வின், மற்றும் மற்ற போட்டியாளர்களுடன் அடித்த கூத்து, ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அனைவரிடமும் எதார்த்தமாக இவர் நடந்து கொண்ட விதம், ஒவ்வொருவரும் இவரை தங்களுடைய வீட்டு பெண்ணாகவே பார்க்க துவங்கினர்.

Tap to resize

இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தின் காரணமாக தற்போது சிவகார்த்திகேயனுடன் 'டான்' உள்ளிட்ட சில படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு ஷிவாங்கிக்கு கிடைத்தது.
 

இந்நிலையில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்த ஷிவாங்கி இப்போது, அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக மாறியுள்ளார். இதுற்குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் ஒன்றையும் போட்டுள்ளார்.
 

இதன் மூலம் இது நாள் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா எங்கே என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இதேபோல், விஜய் டிவி  ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியை கூட மிக அண்மையில் பிரியங்கா இல்லாமல் மா.கா.பா.ஆனந்த் தொகுத்து வழங்கினார் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இதற்காக அவர் தனிமையில் இருந்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!