சம்பள விஷயத்தில் கமலின் ஓரம் கூட நிற்கமுடியாத அர்ஜுன் - விஜய் சேதுபதி! பிக்பாசுக்கு இத்தனை கோடி வாங்குறாரா?

Published : Sep 17, 2021, 01:16 PM IST

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் வாங்க போகும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. கடந்த நான்கு சீசனை விட இந்த சீசனுக்கு இவருடைய சம்பளமும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.  

PREV
16
சம்பள விஷயத்தில் கமலின் ஓரம் கூட நிற்கமுடியாத அர்ஜுன் - விஜய் சேதுபதி! பிக்பாசுக்கு இத்தனை கோடி வாங்குறாரா?

வெளிநாடுகளிலும், மற்ற மொழியிலும் சூப்பர் ஹிட் ஆன நிகழ்ச்சிகளை, அதிக அளவிற்கு பணத்தை கொட்டி, தொலைக்காட்சிகள் தயாரித்து வருகிறது. 

26

அந்த வகையில் உருவான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தற்போது வரை நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை தொடர்ந்து, சன் டிவி-யில் விஜய் சேதுபதியை தொகுப்பாளராக வைத்து மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும், ஜீ தமிழ் தொலைக்காட்சி அர்ஜுனை 'சர்வைவர்' என்கிற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளது.

36

ஏற்கனவே, மாஸ்டர் செஃப் மற்றும் சர்வைவர் நிகழ்ச்சி ஆரம்பமாகி விட்ட நிலையில், அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பிக்பாஸ் சீசன் 5 ஷோவை விஜய் டி.வி. துவங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த மூணு  ரியாலிட்டி ஷோஸையுமே கோலிவுட்டோட டாப் ஹீரோஸ் தொகுத்து வழங்கி வந்தாலும், சம்பள விஷயத்தில் விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுனை ஓரம் காட்டியுள்ளார் உலகநாயகன் கமல்.
 

46

ஒரு நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் சம்பளமாக 4 கோடி வாங்க உள்ளாராம். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக 15  முதல் 20 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ளாராம். எனவே எப்படியும் கூட்டி கழித்து பார்த்தல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் சுமார் 60 கோடி வரை சம்பளமாக பெற உள்ளார்.

56

அடுத்து ஜீ தமிழ் டி.வி.ல டெலிகாஸ்ட் ஆகி வரும் சர்வைவர் நிகழ்ச்சிக்காக அர்ஜூனுக்கு மொத்தமாவே 5 கோடி தான் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். அத்தோட அர்ஜுன் புரோடுக்ஷனில் அவருடைய பொண்ணு நடிக்கிற படங்களோட டி.வி ரைட்ஸையும் ஜீ தமிழ் சேனல் வாங்கிப்பாங்கன்னு சொல்லுறாங்க.  
 

66

இதே மாதிரி டீலை தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூடவும் சன் டிவி போட்டு இருக்காங்களாம்.  இந்த ஷோவ தொகுத்து வழங்குறதுக்காக மக்கள் செல்வனுக்கு ஒரு எபிசோடுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாகவும், அதோட சன் டிவியுடன் விஜய் சேதுபதி 15 கோடி ரூபாய்க்கு ஒரு அக்ரிமெண்ட் சைன் பண்ணியிருக்குறதாவும் சொல்லப்படுகிறது.  அதில் விஜய் சேதுபதி நடிப்பில வெளியாகியிருக்குற 'லாபம்', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட சில படங்களோட சாட்டிலைட் ரைட்ஸ சன் டிவிக்கே கொடுக்குறதா? டீல் போடப்பட்டுள்ளதாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories