கடைசி இடத்தில் இருந்த சாச்சனா; ஆனா எலிமினேட் ஆனது சிவா - நியாயமானு கேட்கும் சுஜா!

First Published | Dec 2, 2024, 7:13 PM IST

Bigg Boss Tamil Season 8 : நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சிவா எலிமினேட் ஆனா நிலையில், அவரது மனைவி நடிகை சுஜா வருணீ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Vijay Sethupathi

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன். இதற்கு முன்னதாக இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த முறை அவருடைய திரைப்பட பணிகளின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க முடியாமல் போனது. ஆகையால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க தொடங்கினார். தொடக்கத்திலிருந்து அவருடைய பேச்சுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பாக மாறிய ஆசை! 40 வயசாகியும் திருமணம் செய்து கொள்ளாத ஷங்கர் பட ஹீரோயினா இது?

Big Boss Season 8

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை தொடக்கத்தில் ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என்று மொத்தம் பதினெட்டு பேருடன் பிக் பாஸ் போட்டி தொடங்கியது. ஆண்கள், பெண்கள் என்று இரு வீடுகளாக அது பிரிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி தொடங்கிய 24வது மணி நேரத்தில் நடிகை சாச்சனா வெளியேற்றப்பட்டார். பிரபல நடிகை சாச்சனா, மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் வெளியேற்றப்பட்டதற்கு பொதுமக்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ரகசிய கதவின் வழியாக அவர் மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார்.

Latest Videos


Sachana Namidas

இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சி 28 நாட்களை கடந்த நிலையில், 6 புதிய போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் பிரபல நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரும் அடங்குவார். ஏற்கனவே ரவிந்தர், அர்னவ், தர்ஷா, ரியா, வர்ஷினி ஆகியோர் எலிமினேட் ஆன நிலையில் கடந்த வாரம் நடிகர் சிவா எலிமினேட் செய்யப்பட்டார். இவர் 28 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாரம் ஜாக்லின், மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சுனிதா, சௌந்தர்யா மற்றும் தர்ஷிகா உள்ளிட்டவர்கள் எலிமினேஷன்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suja Varunee

தற்போது நேற்று எலிமினேட் செய்யப்பட்ட நடிகர் சிவாவின் மனைவி நடிகை சுஜா வருணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் நாமினேட் செய்யப்பட்டவர்களுடைய லிஸ்டில் தன்னுடைய கணவர் ஆறாவது இடத்தில் இருந்தார் என்றும், அதேபோல அந்த லிஸ்டில் இறுதியில் இருந்தது சாச்சனா தான் என்றும் கூறியுள்ளார். ஆனால் இறுதியில் இருந்தவர் காப்பாற்றப்பட்டு, ஆறாம் இடத்தில் இருந்தவர் எலிமினேட் செய்யப்பட்டது ஏற்புடையதாக இல்லை என்று கூறி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சுஜா.

நடிப்பால் அசரடித்த சாவித்ரி; இயக்குனர் அவதாரம் எடுத்த ஒரே படம் எது தெரியுமா?

click me!