மெயின் வில்லனுக்கு உதவியாக இருக்கும் தீவிரவாதிகளில் ஒருவராக நடித்த ஷைன் டாம் சாக்கோ, சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‘பீஸ்ட்’ தமிழில் அவருக்கு நல்ல என்ட்ரியாகத் தோன்றுகிறதா என்று தொகுப்பாளர் அவரிடம் கேட்டதற்கு, ‘பீஸ்ட்’ படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல என்ட்ரி இல்லை...” என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். ஷைன் டாம் சாக்கோ கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது மற்றும் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.