மேலும், படத்திற்கான பல விரிவான விளம்பரங்களை தயாரிப்பாளர்கள் பல்வேறு இடங்களில் திட்டமிட்டுள்ளனர். டீஸர் வெளியீட்டு விழாவிற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. அதற்கான பணிகளுக்காக ஒரு குழுவினர் நகரில் முகாமிட்டுள்ளனர்.'பொன்னியின் செல்வன்' படத்தில் சியான் விக்ரம் , ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, மற்றும் தொழில்துறை முழுவதும் பல பிரபலமான முகங்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் கதாபாத்திரங்களின் பெயர்கள் முன்பே அறிவிக்கப்பட்டன. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படத்தின் இசையை பண்டைய காலத்துடன் இணைக்க பழங்கால இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.