Rajinikanth’s next titled Jailer: ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு ஜோடி இவங்களா... இது வில்லங்கமான கூட்டணி ஆச்சே

Published : Jun 17, 2022, 02:57 PM ISTUpdated : Jun 17, 2022, 03:30 PM IST

Rajinikanth’s next titled Jailer, Sun Pictures Shares First Poster: தலைவர் 169 படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு உள்ளதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது. அதன்படி இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

PREV
14
Rajinikanth’s next titled Jailer: ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு ஜோடி இவங்களா... இது வில்லங்கமான கூட்டணி ஆச்சே

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக அடுத்த படத்திற்கான கதை தேர்வில் மிகவும் கவனமாக செயல்பட்டு வந்தார் ரஜினி.

24

இறுதியில், பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனுக்கு தனது 169-வது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதம் ஐதராபாத்தில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

34

தலைவர் 169 படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு உள்ளதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது. அதன்படி இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிறையில் தான் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

44

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்து மாஸ் காட்டி இருந்த ரம்யா கிருஷ்ணன், தற்போது அவருக்கு ஜோடியாக நடிப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... ஆடையின்றி காஃபியில் குளியல் போட்ட பிகில் பட நடிகை... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories