எனது 'பஞ்ச்' டயலாக்கை யாரும் யூஸ் பண்ணக் கூடாது.. நீதிமன்ற படியேறிய சினிமா ஸ்டார்!

Published : Feb 18, 2026, 05:37 PM IST

தனது பெயர், முகம், தனித்துவமான ஸ்டைல் மற்றும் குறிப்பாக தனது புகழ்பெற்ற டயலாக்குகளைச் சமூக ஊடகங்களிலும், வணிக ரீதியாகவும் பலர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

PREV
13
நீதிமன்ற படியேறிய சத்ருகன் சின்ஹா

ஒரு படத்தின் இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் தங்களது கதையை மற்றொருவர் திருடி விட்டதாக நீதிமன்றம் செல்வது வழக்கம். இதேபோல் இசையமைப்பாளர்கள் சிலரும் காப்புரிக்காக நீதிமன்றம் சென்றதை பார்த்திருக்கலாம். இந்த நிலையில், பழம்பெரும் நடிகரும், பிரபல அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா தான் சினிமாவில் பேசிய 'பஞ்ச்' டயலாக்கை வேறு யாரும் யூஸ் பண்ணக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

23
சத்ருகன் சின்ஹாவின் டயலாக் புகழ்பெற்றது

1970 மற்றும் 1980களில் பாலிவுட் திரையுலகில் சத்ருகன் சின்ஹா கொடிகட்டி பறந்தார். வில்லனாக இருந்து ஆக்சன் ஹீரோவாக ஜொலித்தார். இவருடைய வில்லன் காதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. இவரது தனித்துவமான குரல் மற்றும் ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. சத்ருகன் சின்ஹாவின் டயலாக் மிகவும் புகழ்பெற்றது. அதுவும் அவர் அடிக்கடி உச்சரிக்கும் Khamosh (காமோஷ்) என்ற டயலாக் மிகவும் பிரபலமானவை.

33
மும்பை நீதிமன்றத்தில் வழக்கு

பல்வேறு படங்களில் எதிரிகளை அடக்க அவர் பயன்படுத்தும் காமோஷ் என்ற டயலாக்கை வணிகரீதியாக பலரும் விளம்பரங்களில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்காகவும் பலரும் இவரது டயலாக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் எனது பஞ்ச் டயலாக்கை மற்ற யாரும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சத்ருகன் சின்ஹா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

20 கோடி ரூபாய் இழப்பீடு

தனது பெயர், முகம், தனித்துவமான ஸ்டைல் மற்றும் குறிப்பாக தனது புகழ்பெற்ற டயலாக்குகளைச் சமூக ஊடகங்களிலும், வணிக ரீதியாகவும் பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். தனது குரலையும் உருவத்தையும் பயன்படுத்தி ஆபாசமான அல்லது கிண்டலான உள்ளடக்கங்களை உருவாக்குவது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறது. ஆகவே எனது பஞ்ச் டயலாக்குகளை யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அவரது சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தனது பெயர், பஞ்ச் டயலாக் பயன்படுத்தியதற்கு 20 கோடி ரூபாய் இழப்பீடும் அவர் கேட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories