இளையராஜாவுக்கு செக்... தடையில் சிக்கிய மாஸ்டர் பீஸ் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட்

Published : Feb 18, 2026, 04:20 PM IST

இளையராஜா, தனது சொந்த பாடல்களையே பயன்படுத்த முடியாத சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளார். நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இசை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

PREV
14
Saregama Copyrights clash with Ilaiyaraaja

1970-களில் தமிழ் சினிமாவில் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த இளையராஜா, பல தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் இசையமைப்பதோடு, பாடல் பாடுவது, எழுதுவது என பன்முக திறமை படைத்தவராக இருந்தார் இளையராஜா. சமீப காலமாக, தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது வழக்குகள் தொடர்ந்து வந்தார் இளையராஜா. ஆனால் தற்போது சரிகம நிறுவனம் தொடுத்த வழக்கில் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்துள்ளார்.

24
வழக்கின் பின்னணி

சரிகம நிறுவனம், இந்த 134 படங்களின் பாடல் உரிமைகளை அந்தந்த தயாரிப்பாளர்களிடம் இருந்து சட்டப்படி வாங்கியதாக கூறியுள்ளது. இளையராஜா இந்த பாடல்களை அமேசான் மியூசிக், ஜியோசவன், ஐடியூன்ஸ் போன்ற டிஜிட்டல் தளங்களுக்கு விற்றது சட்டவிரோதம் என்றும் வாதிட்டது. காப்புரிமை சட்டத்தின்படி, ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளரே அந்த படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களுக்கும் முதன்மை உரிமையாளர் என்பது சரிகம நிறுவனத்தின் வாதம். இதை ஆதரிக்கும் விதமாக தேவையான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

34
134 படங்களுக்கு தடை

இதன் அடிப்படையில், நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, 134 திரைப்படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்தவோ, அதன் மீதான உரிமையை கோரவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 1976 முதல் 2001 வரை இசையமைக்கப்பட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் இதில் அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், இளையராஜாவின் அறிமுக படமான 'அன்னக்கிளி'யும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

44
லிஸ்ட்டில் உள்ள சூப்பர் ஹிட் படங்கள் என்னென்ன?

அந்த பட்டியலில்...

அன்னக்கிளி (இளையராஜாவின் முதல் படம்)

16 வயதினிலே (பாரதிராஜாவின் முதல் படம்)

ரோசாப்பூ ரவிக்கைகாரி (சிவக்குமார் நடித்த படம்)

ரெட்டைவால் குருவி (மோகன், ராதிகா ஜோடியாக நடித்த படம்)

முள்ளும் மலரும் (ரஜினி படம்)

துரல் நின்னு போச்சு (பாக்யராஜ் படம்)

கிழக்கே போகும் ரயில் (ராதிகாவின் முதல் படம்)

மூடுபனி (பாலுமகேந்திரா படம்)

ஆகிய படங்களும் இந்த பட்டியலில் உள்ளன. மொத்தம் 900க்கும் மேற்பட்ட பாடல்கள் இதில் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories