Sharwanand Sparks Divorce: பிரபல இளம் நடிகர், தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை நீக்கியதன் மூலம், இவரது விவாகரத்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடிகை அனன்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த். இவருக்கு தெலுங்கு திரையுலகில் எப்படி ரசிகர்கள் வட்டாரம் உள்ளதோ, அதே போல் தமிழிலும் ரசிகர்கள் உள்ளனர்.
27
நடிகர் சர்வானந்தின் விவாகரத்து
தற்போது நடிகர் சர்வானந்தின் விவாகரத்து செய்திதான் சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு, தன்னுடைய காதலி ரக்ஷிதா ரெட்டி என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் சர்வானந்த் திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிமையான முறையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தாலும், டோலிவுட் திரையுலகமே மெச்சும் அளவிற்கு திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, ராம்சரண், நாக சைதன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
37
திருமண வாழ்க்கை
பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காத சர்வானந்த், திருமண வாழ்க்கையும் மிகவும் அமைதியான முறையில் சென்றது. அதேபோல் கடந்த 2024ஆம் ஆண்டு சர்வானந்த் - ரக்ஷிதா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. இதை அவர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார்.
47
கருத்து வேறுபாடு
தற்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த சில மாதங்களாகவே சர்வானந்த் விவாகரத்து முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த ஒரு வருடமாக கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டு வந்தது. எனினும் இருதரப்பு குடும்பத்தினரும், குழந்தையை காரணமாகக் கொண்டு இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
57
திருமண புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்
ஆனால் தற்போது தன்னுடைய விவாகரத்தை உறுதி செய்யும் விதமாகவே சர்வானந்த் தனது சமூக வலைதள கணக்குகளில் இருந்த அனைத்து திருமண புகைப்படங்களையும் நீக்கியுள்ளார் என டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் இது உண்மையா என்று கேள்வி எழுப்பி வருவதோடு, அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்து இந்த தகவலை உறுதி செய்து வருகிறார்கள்.
ஆனால் நம்பகமான வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் படி, சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி ஆகியோர் இதுவரை சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. அவர்களுக்குள் சில தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்ததால், ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதே உண்மை என கூறப்படுகிறது. இது நிரந்தர பிரிவு அல்ல; தற்காலிகமான பிரச்சனை மட்டுமே என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
77
சர்வானந்த் நேரடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை
குறிப்பாக, இவர்களின் குழந்தையை கருத்தில் கொண்டு இருவரும் அவசர முடிவுகளை எடுக்காமல் இருக்க முயற்சி செய்து வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது. ரசிகர்களும் இந்த ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என தங்களின் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சர்வானந்த் நேரடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல், இது போன்ற தனிப்பட்ட விஷயங்களை பொதுவில் பகிராமல் இருக்கவே அவர் விரும்புகிறார் என்று கருதப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.