“எங்கள ஏமாத்திட்டீங்க விஜய்சேதுபதி”.... வெறித்தனமாக ட்ரெண்ட் செய்யப்படும் #ShameOnVijaySethupathi ஹேஷ்டேக்...!

First Published Oct 14, 2020, 12:22 PM IST

விஜய்சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்றாலே அவருடைய ரசிகர்கள் செம்ம குஷியாகிவிடுவார்கள். ஆனால் இந்த முறையோ அப்படியே ஆப்போசிட்டா #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். ஸ்ரீபதி இயக்கும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் வெளியாகி வைரலானது.
undefined
இந்நிலையில் நேற்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு 800 என பெயர் வைத்துள்ளனர். போஸ்டரில் விஜய் சேதுபதி பார்க்க அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே இருந்தார்.
undefined
எப்போதுமே தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்யும் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை கணிசமாக குறைத்திருந்துள்ளார்.
undefined
விஜய்சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்றாலே அவருடைய ரசிகர்கள் செம்ம குஷியாகிவிடுவார்கள். ஆனால் இந்த முறையோ அப்படியே ஆப்போசிட்டா #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
undefined
காரணம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
undefined
இந்த படம் குறித்த அறிவிப்பு வந்த முதல் நாளில் இருந்தே சோசியல் மீடியா மூலமாக தமிழ் ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதிக்கு இந்த கோரிக்கை வைத்து வந்தனர். சமீபத்தில் இயக்குநர் சீனுராமசாமி கூட முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தார்.
undefined
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இலங்கை தமிழர்கள் என முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பின. நேற்று மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், சிங்கள அரசின் கைக்கூலியாக முத்தையா முரளிதரன் செயல்படுவதால் அவருடைய கதையில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்ற எதிர்ப்பு தற்போது வலுவடைந்துள்ளது.
undefined
விஜய்சேதுபதியின் ரசிகர்கள் உட்பட பலரும் இரண்டு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசின் கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு நீங்கள் நடிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்துள்ளனர்.
undefined
நான் முதலில் ஸ்ரீலங்கன் அதுக்கு பிறகு தான் தமிழன்.... எனக்கு நன்றாக தமிழ் பேச வரும் ஆனால் பேசமாட்டேன் என திமிராக கூறிய முத்தையா முரளிதரன் பயோபிக்கில் எப்படியொரு தமிழ் நடிகரான நீங்கள் நடிக்கலாம் என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
undefined
விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கும் நெட்டிசன்களோ, உங்களுக்கு எல்லாம் என்ன ஆனது?... அமெரிக்கன் காந்தியைப் பற்றி படம் எடுக்கும் போது, இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்புகின்றனர்.
undefined
click me!