யார நம்புறதுனே தெரியல... ஐபோன் திருடிய நண்பனை கண்டுபிடித்து வெளுத்துவாங்கிய ஷாலு ஷம்மு

First Published | Apr 24, 2023, 9:47 AM IST

நடிகை ஷாலு ஷம்முவின் விலையுயர்ந்த ஐபோன் திருடுபோன நிலையில், தற்போது அதனை அவரது நண்பன் தான் திருடி இருக்கிறான் என கண்டுபிடித்து உள்ளனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, பவுடர், டிஎஸ்பி போன்ற படங்களில் நடித்துள்ளவர் ஷாலு ஷம்மு. இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்து வருகிறார். இதனால் அதில் அவருக்கு மில்லியன் கணக்கில் பாலோவர்களும் உள்ளனர். அவர்களைக் கவரும் விதமாக அதில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நடிகை ஷாலு ஷம்மு, கடந்த சில வாரத்திற்கு முன் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற பார்ட்டியில் பங்கேற்றார். அந்த பார்ட்டி முடிய லேட் ஆனதால் இரவு வீட்டுக்கு செல்லாமல், சூளைமேட்டில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கி இருந்தாராம். பின்னர் காலையில் எழுந்து பார்த்ததும் தனது ஐபோன் திருடுபோனதை அறிந்து ஷாக் ஆன ஷாலு ஷம்மு, இதுகுறித்து பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... watch : டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்காக சந்தானம் ஆடிய ‘பிரெஞ்ச் குத்து’ பாடல் - டிரெண்டாகும் வீடியோ இதோ

Tap to resize

அந்த புகாரில், தனது 2 லட்சம் மதிப்புள்ள ஐபோனை கண்டுபிடித்து தருமாறு குறிப்பிட்டிருந்த அவர், தன் நண்பர்கள் மீதும் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். புகார் கொடுத்து 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில், தற்போது அவரது ஐபோன் மீண்டும் கிடைத்திருக்கிறது.

தொலைந்துபோன ஐபோன் தன் வீட்டிற்கு டன்சோ பார்சலில் வந்ததாகவும், தான் சந்தேகப்பட்டது படியே என்னுடைய நண்பன் தான் ஐபோனை திருடி இருக்கிறார். 8 வருட நட்பு வீண் போனது. இந்த சம்பவத்துக்கு பின்னர் சத்தியமா எனக்கு யாரை நம்புறதுனே தெரியல என குறிப்பிட்டு திருடிய அந்த நண்பனை கெட்ட வார்த்தையில் திட்டியும் பதிவிட்டுள்ளார் ஷாலு ஷம்மு. மேலும் ஐபோன் தன் கைக்கு திரும்ப கிடைத்ததும் அதில் எடுத்த செல்பி புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் ஷாலு ஷம்மு.

இதையும் படியுங்கள்... உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... ‘அஜித் - ஷாலினி’ ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய நாள் இன்று

Latest Videos

click me!