21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குநர் படத்தில் நடிக்கும் ஷாலினி... கம்பேக்கிற்காக காத்திருக்கும் தல ஃபேன்ஸ்!

Published : Feb 10, 2021, 03:33 PM IST

தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குநருக்காக ஷாலினி அவருடைய படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PREV
15
21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குநர் படத்தில் நடிக்கும் ஷாலினி... கம்பேக்கிற்காக காத்திருக்கும் தல ஃபேன்ஸ்!

தமிழ் சினிமாவில் திரையிலும் சரி, நிஜத்திலும் சரி மீண்டும், மீண்டும் ரசிக்கத் தோன்றும் டாப் ஜோடிகளில் தல அஜித் - ஷாலினி தம்பதிக்கு எப்போது தனி இடம் உண்டு. தல அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் மீது எவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஷாலினி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். 

25

சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்த அமர்களம் படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட, அமர்களம் படம் வெளியான அடுத்த ஆண்டே 2002ல் அஜித், ஷாலினி திருமணம் கோலாகலமாக நடந்தது. 

35

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய ஷாலினி சிறந்த குடும்பத் தலைவியாகவும், அனோஷ்கா, ஆத்விக்கிற்கு சிறந்த அம்மாவாகவும் தன்னுடைய கடமையை தொடர்ந்து வருகிறார். 

45

திரையுலகில் ஷாலினிக்கு இன்றளவும் பெயர் சொல்லும் படி அமைந்த திரைப்படம் என்றால் அது ‘அலைபாயுதே’. காதல் என்ற வார்த்தைக்கான புது புரட்சியுடன் மணிரத்னம் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இன்றளவும் காதலர்களின் பேவரைட் மூவியாக உள்ளது. 

55

தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஷாலினி சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கும் ஷாலினிக்கும் மிகவும் பிடித்த மணிரத்னத்தின் படம் என்பதால் அஜித்தும் ஓகோ சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் ஷாலினியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 
 
click me!

Recommended Stories