இனி யாரும் கவின் பற்றிய கேட்க மாட்டாங்க போல... நெற்றிப்பொட்டில் அடித்த போல் பதிலடி கொடுத்த லாஸ்லியா!

First Published Feb 10, 2021, 12:58 PM IST

இந்நிலையில் இவரிடம் நடிகர் கவினுடன் உண்டான நட்பு குறித்து கேள்வி எழுப்பிய கேள்விக்கு நெற்றியடி பதில் கொடுத்து, இனி யாருமே கவின் பற்றி கேள்வி எழுப்பாத வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.
 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் 'பிரண்ட்ஸ்' படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், தற்போது பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுடன் இணைந்து 'கூகுள் குட்டப்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
undefined
இந்நிலையில் இவரிடம் நடிகர் கவினுடன் உண்டான நட்பு குறித்து கேள்வி எழுப்பிய கேள்விக்கு நெற்றியடி பதில் கொடுத்து, இனி யாருமே கவின் பற்றி கேள்வி எழுப்பாத வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.
undefined
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சின் காதலர்களாக வலம் வந்தவர்கள் லாஸ்லியா மற்றும் கவின். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இருவரும் உருகி... உருகி... காதலிப்பது போல் நடந்து கொண்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை.
undefined
ஆனால் இவர்களுடைய ரசிகர்களோ லாஸ்லியா கவின் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டு கொள்ளாமல் இருவரும் அவரவர் பாதையில் பயணிக்க துவங்கி விட்டனர்.
undefined
கவினிடம் லாஸ்லியா குறித்து கேள்வி எழுப்பினால், தனக்கு நிறைய கடமை உள்ளது என கழண்டு கொள்வார், அதே போல் லாஸ்லியாவிடம் கேள்வி எழுப்பினால், சிரித்து மழுப்பி வந்தார்.​
undefined
இந்நிலையில் கவின் குறித்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள லாஸ்லியா, 'அது தனது பெர்சனல் விஷயம் என்றும், அது பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் நான் நடிக்கும் படங்கள் குறித்த கேள்விகளை மட்டும் கேளுங்கள் என நெத்தியடி பதில் கூறியுள்ளார்.
undefined
அதே போல், பிக்பாஸ் வீட்டில் சகோதரர் போல் பழகிய, தர்ஷனுடன் ஜோடியாக நடிப்பது குறித்து எழுபட்ட கேள்விக்கு, 'அது பர்சனல் வாழ்க்கை, இது சினிமா வாழ்க்கை'. நாங்கள் இருவரும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து விட்டு அதன் பின்னர் அந்த கதாபாத்திரங்களை மறந்து விடுவோம்’ என்று இலங்கை தமிழில் பதிலளித்துள்ளார்.
undefined
click me!