ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் மிகவும் நடந்து வருவது நாம் அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் நடிகை நயன்தாரா, தன்னுடைய அம்மா மற்றும் காதலர் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பூனேவில் இருந்து சென்னை திரும்பினார். சமீபத்தில் இவர் தன்னுடைய நிச்சயதார்த்த தகவலை உறுதி செய்த நிலையில், விரைவில் திருமண அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் குறித்து அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அட்லீ இயக்கும் திரைப்படம் 'மணி ஹெய்ஸ்ட்' கிரைம் வெப் தொடரின் ரீமேக் என்கிற தகவல் அசரால் புரசலாக வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கம் படத்திலும், ஒரு வங்கியை ஹீரோ கொள்ளை அடிக்கும் கதையம்சம் கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வலம் வருகிறது. ஏற்கனவே இதுபோன்ற கதை ஒன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ’மணி ஹெய்ஸ்ட்’ என்ற டைட்டிலில் வெளிவந்த நிலையில் அந்த கதையின் இந்திய உரிமையை ஷாருக்கான் வாங்கி உள்ளதாகவும் அந்தக் கதையைத்தான் அட்லி தனது பாணியில் டெவலப் செய்து 'லயன்' என்ற திரைப்படமாக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிகை ப்ரியா மணி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.