தல அஜித் எங்கு சென்றாலும், எது செய்தாலும் அதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வரும் நிலையில், தற்போது அஜித் தாஜ் மஹால் முன்பு எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அஜித் வலிமை படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த மாதம் ரஷ்யா சென்றதும், படப்பிடிப்பு முடிந்த கையேடு ஒட்டு மொத்த படக்குழுவும் சென்னை திரும்பிய நிலையில், இவர் 5000 கிலோமீட்டர் பைக் ரைடு செல்வதற்காக சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்ததும் அனைவரும் அறிந்தது தான்.
அஜித் ரஷ்யாவில் பைக் ரைடில் ஈடுபட்ட போது, அங்குள்ள பைக் ரைடர்ஸுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.
தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித், சில நாட்கள் குடும்பத்துடன் ஓய்வு எடுத்த பின்னர் மீண்டும் தன்னுடைய சாகச பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
அந்த வகையில், டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் தல அஜித் டெல்லி வந்துள்ளார்.
இந்த போட்டியின் பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அஜித், தாஜ்மகாலை சுற்றி பார்க்க சென்ற போது, அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
அஜித்தும் சற்றும் அசராமல், தன்னுடன் புகைப்படம் எடுத்து கொள்ள ஆசை பட்ட அனைத்து ரசிகர்களுக்கும் புன்னகையோடு போஸ் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.
மிகவும் கலகலப்பாக அஜித் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில், செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் அஜித் செம்ம கூலாக இந்த புகைப்படங்களில் காட்சியளிக்கிறார். மொத்தத்தில் தல தோற்றம் வெறித்தனமாக உள்ளது...