மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.
கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.
மாஸ்டர் படத்தில் ஹீரோயினுக்கு குறைவாகவே முக்கியத்துவம் இருந்த போதும், ரசிகர்களின் மனதில் தாரளமாக இடம் பிடித்துவிட்டார். அதன் பலன் தமிழ் சினிமாவின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டிலும் இடம் கிடைத்துவிட்டது.
நடிகர் தனுஷ்ஷுடன் இணைந்து “மாறன்“ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இவர் “அருவா” எனும் திரைப்படத்தில் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாலிவுட்டில் பிரபல இயக்குநர் ரவி உதய்வார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் சதுர்வேதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான “யுத்ரா” திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.