நீங்கள் தூரமாக இல்லை..! மறைந்த நடிகர் சேதுராமன் குறித்து உருக்கமாக பதிவிட்ட மனைவி உமா..!

Published : Mar 29, 2021, 11:16 AM IST

பிரபல காமெடி நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர், மருத்துவரும் நடிகருமான சேதுராமன். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். கொரோனா தொற்று பரவ துவங்கிய போது, அதில் இருந்து மக்கள் எப்படி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  

PREV
16
நீங்கள் தூரமாக இல்லை..! மறைந்த நடிகர் சேதுராமன் குறித்து உருக்கமாக பதிவிட்ட மனைவி உமா..!

இவரது மறைவு, இவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா நேரம் என்பதால்... பிரபலங்கள் பலர் இவருடைய இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், இவரது உயிர் நண்பர் சந்தானம் இறுதி சடங்கு வரை இருந்தார். மேலும் சேதுராமன் இறந்தபோது நான்கு மாதம் கர்ப்பமாக இருந்த அவரது மனைவி உமாவிற்கு சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

26

எனவே சேதுராமன் மீண்டும் குழந்தை ரூபத்தில் பிறந்து விட்டார் என, அவரது குடும்பத்தினர் இதனை கொண்டாடினர்.  இந்த நிலையில் சேதுராமன் மரணம் அடைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில்... நெஞ்சை உருக்கும் விதமாக பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவரது மனைவி உமா.

36

இதில்... 'மா' இப்படித்தான் நான் உங்களை என்றுமே நான் அன்பாக அழைப்பேன். உங்கள் பெயரை வைத்து இதுவரை கூப்பிட்டதே இல்லை. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நான் உங்கள் மீது அன்பும், மரியாதையும் வைத்துள்ளேன். எனது தினசரி வாழ்க்கை உங்களைச் சுற்றி, உங்களை மட்டுமே சுற்றி இருந்தது. உங்கள் சந்திப்புகளை/ பயணங்களை/ தினசரி நோயாளிகள் பட்டியலை/ உடற்பயிற்சி நேரத்தை/ உணவை/ ஓய்வைத் திட்டமிடுவேன்.

46

4 வருடங்களில் உங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திருக்கிறேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி மட்டுமே நினைத்திருக்கிறேன். அதை சாத்தியப்படுத்த என்னால் முடிந்த வகையில் சின்னசின்ன வழிகளில் உதவியிருக்கிறேன். நீங்கள் கனவு காண்பதை நிறுத்தியதே இல்லை. உங்கள் கனவுகளை நனவாக்க சாத்தியப்படும்போது நான் வேண்டாம் என்று சொன்னதே இல்லை.

56

உங்களுக்குக் கிடைக்க அரிதான ஒரு உதவியாளர் நான், அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் என்று பல முறை சிறுபிள்ளைத்தனமாக நாம் பேசியிருக்கிறோம். பணம் என்றுமே உங்களுக்கு முக்கியமாக இருந்ததில்லை. மகிழ்ச்சியும் அன்பு மட்டுமே முக்கியம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் வருத்தமாக இருந்தால் உங்களால் உறங்க முடியாது. அதிகம் சிந்திக்கும், ஆர்வம் கொண்ட, ஆத்மார்த்தமான, குழந்தைத்தனமான, அப்பாவியான, முதிர்ந்த ஆன்மா நீங்கள். உங்களையும் உங்கள் குணங்களையும் யாராலும் பிரதி எடுக்க முடியாது.
 
66

ஒரு வருடம் அதற்குள் முடிந்துவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் கதவைத் தட்டுவீர்கள் என்று இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். தட்டுவீர்களா? வேதாந்தும், சஹானாவும் வளர்ந்து கதவைத் தட்டும் வரை நான் காத்திருப்பேன். நீங்கள் தூரமாக இல்லை. எங்களால் கேட்க, பார்க்க முடியாத அளவு நெருக்கமாக இருக்கிறீர்கள். என்று உமா தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories