கடந்த 2018ம் ஆண்டு காதல் மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால், பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக கூறப்பட்டது. அதை மறுத்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக கூறினர்.
இருப்பினும் பார்ட்டிகளில் நெருக்கமாக இருப்பதும், ஒன்றாக ஊர் சுற்றுவதும் போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன.இந்த ஆண்டு காதலர் தினத்தை ஒன்றாக கொண்டாடிய இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி வைரலானது.
சமீபத்தில் இவர்கள் இருவரும் மாலைதீவிற்கு ஒன்றாக சென்று வந்ததால், ரசிகர்கள் பலர் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதா? என்பது போன்ற கேள்விகளையும் முன் வைத்து வந்தனர்.
இந்நிலையில் ஜுவாலா கட்டா தன் தோழிகளுடன் கலந்து கொண்ட பார்ட்டியில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டது.
மணமகள் திருமணத்திற்கு ஒரிரு நாட்கள் முன்பு அணிந்து கொண்டு, பேச்சிலர் பார்ட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பதால் விரைவில் விஷ்ணு விஷாலுக்கும், ஜுவாலா கட்டாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமண தகவலை ஏற்கனவே உறுதி செய்த விஷ்ணு விஷால்... சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’ஜூவாலா கட்டாவுடன் ஏப்ரல் இறுதியில் திருமணம் நடைபெறும் என்றும் திருமண தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதன் மூலம் இவர்களுக்கு அடுத்த மாதம், திருமணம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள, காடன் திரைப்படமும் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.