கோடை காலத்தில் குரங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைத்து... உணவு வழங்கும் தளபதி விஜய் மக்கள் இயக்கம்!

First Published May 23, 2021, 7:08 PM IST

வெயில் கொளுத்தும் கோடை காலத்தில், மக்கள் தரும் உணவுகளை நம்பியே வாழும் குரங்குகள், தற்போது கொரோனா காலத்தால் போடட்ட ஊரடங்கு காரணமாக, உணவில்லாமல் தண்ணீர் இல்லாமலும் தவித்து வந்த நிலையில், அவைகளுக்கு தண்ணீர் தொட்டி மட்டும் தினமும் பழங்கள் போன்றவற்றை கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
 

புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது.
undefined
இது வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும் சுற்றிலும் காடு போல் இருப்பதாலும் குரங்குகளுக்கு தண்ணீர் கூட கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது.
undefined
ஆகையால் நிரந்தரமாக குரங்குகளுக்கு தண்ணீர் கிடைத்திடும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு குரங்குகளின் பயன்பாட்டுக்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ள, குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் போன்ற பழங்களை வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.
undefined
அதன்படி குரங்குகளுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தர்பூசணி, வாழை போன்ற பழங்களை தனி தனி தொட்டிகளில் கொட்டி வைத்ததுமே, பசியில் இருந்த குரங்குகள் அதனை ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தது.
undefined
கோவிலில் இருந்து குரங்குகளுக்கு கொடுக்கப்படும் பழங்கள் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளும் கிடைக்கும் பழங்களை இந்த வாயில்லா ஜீவன்களுக்கு தினமும் கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் மக்கள் மன்றத்தினரின் இந்த செயல்களுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.
undefined
click me!