நாயகி சீரியலில் இருந்து விலகியது உண்மையா? என்ன காரணம்... நடிகர் வித்யா பிரதீப் வெளியிட்ட தகவல்!

First Published | Jul 30, 2020, 12:22 PM IST

நாயகி சீரியலில், குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து வரும் வித்யா, இந்த சீரியலில் தற்போது நடிக்காததால், இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து ஏன், சீரியலை விட்டு விலகியது ஏன் என கேள்வி எழுப்பி வருகிறார். இதற்க்கு நடிகை வித்யா பிரதீப் பதிலளித்துள்ளார்.
 

சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார்.
Tap to resize

அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார்.
அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் நடித்து வருகிறார்.
குடும்ப தலைவியாக செம்ம கெத்தாக நடித்து வரும் வித்யா பிரதீப்.
இருப்பினும் மாடலிங் துறையில் பிசியாக வலம் வந்த போது கொடுத்த ஹாட் கிளிக்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.
சீரியலில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தி வருகிறாரோ அதே அளவிற்கு திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் நடித்து வந்த, நாயகி சீரியல் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், அதில் ஒரு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நக்ஷத்ரா, நடிகர் கிருஷ்ணா, ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதனால் நடிகை வித்யா பிரதீப்பிடம் தொடர்ந்து ரசிகர்கள் இந்த சீரியலில் இருந்து விலகியது ஏன் என கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள வித்யா பிரதீப், நான் சீரியலை விட்டு விலகவில்லை, நான் நடித்து வந்த பகுதி முடிந்து விட்டது, இதை நான் ஏற்கனவே அறிவித்துள்ளேன் என கூறி இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

Latest Videos

click me!