Neelima Esai : குழந்தை பிறந்ததை குதூகலத்தோடு அறிவித்த நடிகை நீலிமா.... குவியும் வாழ்த்துக்கள்

Ganesh A   | Asianet News
Published : Jan 07, 2022, 07:39 AM IST

நடிகை நீலிமாவுக்கு குழந்தை பிறந்ததை அறிந்த ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

PREV
18
Neelima Esai : குழந்தை பிறந்ததை குதூகலத்தோடு அறிவித்த நடிகை நீலிமா.... குவியும் வாழ்த்துக்கள்

கமலின் தேவர் மகன் படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன் பின்னர் மொழி, தம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

28

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நீலிமா ராணி இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக வில்லி வேடத்தில் பின்னிபெடலெடுத்து வருகிறார்.

38

கோலங்கள், மெட்டி ஒலி சீரியல்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நீலிமா. அனைவரும் அறிந்த பிரபலமான சின்னத்திரை முகமாக வலம் வருகிறார்.

48

சீரியல், சினிமா, தொகுப்பாளினி, தயாரிப்பாளர் என பல அடையாளங்களைக் கொண்டுள்ள நடிகை நீலிமா ராணிக்கு திருமணம் ஆகி, ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில்... கடந்தாண்டு இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.

58

இதனால் அவர் தான் நடித்து வந்த அனைத்து சீரியல்களில் இருந்தும் விலகி தன்னுடைய குடும்பத்துடன் பொழுதை கழித்து வந்தார்.

68

இந்நிலையில், நடிகை நீலிமா, தனக்கு 2-வது குழந்தை பிறந்துள்ள தகவலை சமூக வலைதளம் வாயிலாக தனது ரசிகர்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

78

2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், கடந்த 5-ந் தேதி குட்டு தேவதை இந்த உலகில் காலடி எடுத்து வைத்து தங்களது வாழ்வை மேலும் மகிழ்ச்சியாக்கியதாக நீலிமா தெரிவித்துள்ளார்.

88

நடிகை நீலிமாவுக்கு குழந்தை பிறந்ததை அறிந்த ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!

Recommended Stories