Serial Actress Janani Shocking post: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வாய்ப்பை நிராகரித்த சீரியல் நடிகை ஜனனி, தற்போது போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் TRP -யை அள்ளக்கூடிய ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 முடிவுக்கு வந்த நிலையில், இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை அன்று கோலாகலமாக துவங்கியது.
25
எதிர்பாராத போட்டியாளர்கள்:
கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வரும் நிலையில், மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், கலையரசன், ரம்யா ஜோ, சுபிக்ஷா, பலூன் அக்கா அரோரா, ஆகியோர் மக்கள் சற்றும் எதிர்பாராத போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
35
சண்டை போட்டு கன்டென்ட்:
சிலர் எதார்த்தமாக விளையாடி வந்தாலும், ரம்யா ஜோ, சுபிக்ஷா ஆகியோர் சண்டை போட்டு கன்டென்ட் கொடுப்பதில் குறியாக உள்ளனர். திவாகர் மற்றும் பார்வதியை டார்கெட் செய்து இவர்கள் சண்டை போடுவதை பார்க்கமுடிகிறது. இதை அவர்களே வெளிப்படையாகவும் பேசி சிக்கி உள்ளனர்.
45
போர் அடிக்கும் பிக்பாஸ் 9:
மேலும் மற்ற போட்டியாளர்களும் திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதை கவராமல், சண்டை போடுவதை மட்டுமே வேலையாக வைத்துள்ளார்கள். இதனால் இந்த சீசன் மக்களுக்கு இப்போதே போர் அடிக்க துவங்கிவிட்டது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க பிக்பாஸ் தினுசு தினுசா ரூல்ஸ் போட்டாலும்... அதையெல்லாம் சில்லித்தனமான சண்டையால் டேமேஜ் செய்கிறார்கள் ஹவுஸ் மேட்ஸ்.
55
ஜனனி அசோக்குமார் பதிவு:
இந்த நிலையில் தான் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட, பிரபல சீரியல் நடிகை ஜனனி... "நல்ல வேலை நான் அதை மிதிக்கல" என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை மறைமுகமாக சாடி இன்ஸ்டாகிராமில் ஷாக்கிங் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.